- Home
- Astrology
- Astrology: சில தினங்களில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்.! பொன், பொருள், சொத்துக்களை குவிக்கப் போகும் ராசிகள்.!
Astrology: சில தினங்களில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்.! பொன், பொருள், சொத்துக்களை குவிக்கப் போகும் ராசிகள்.!
Gajakesari rajyog: சந்திரன் மற்றும் குரு பகவான் இருவரும் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.

குரு சந்திரன் சேர்க்கை
அக்டோபர் மாதத்தில் பல ராஜயோகங்கள் உருவாகி மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வர உள்ளன. அந்த வகையில் அக்டோபர் 12 ஆம் தேதி ஒரு சிறப்பு ஜோதிட சேர்க்கை உருவாக இருக்கிறது. அக்டோபர் 12 அன்று சந்திர பகவான் மிதுன ராசியில் நுழைய இருக்கிறார். அங்கு ஏற்கனவே குரு பகவான் பயணித்து வரும் நிலையில், இந்த இரு சுப கிரகங்களின் சேர்க்கை மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்கள் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர்.
கஜகேசரி ராஜயோகத்தின் பலன்கள்
வேத ஜோதிடத்தின்படி கஜகேசரி ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகமானது மன அமைதியையும், உற்சாகத்தையும் தருவது மட்டுமல்லாமல் செல்வ செழிப்பையும் வழங்கும் என நம்பப்படுகிறது. தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சில ராசிக்காரர்கள் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்க உள்ளனர். இந்த யோகம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்ற பாதைகளை திறக்க உள்ளது. இவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிக்க உள்ளனர். இந்த ராஜயோகத்தால் அதிக நன்மை அடையும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
- கஜகேசரி ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மைகளைத் தரும்.
- இந்த ராஜயோகம் உங்கள் ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் உருவாக இருக்கிறது.
- இதன் காரணமாக உங்கள் தொடர்பு திறன் மேம்படும்.
- உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை சிறப்பாக வெளிப்படுத்துவீர்கள்.
- முடங்கி கிடந்த பணம் திடீரென கைக்கு வந்து சேரும்.
- நிதி நிலைமை மேம்படும். முதலீடுகளில் இருந்து திடீர் லாபங்கள் கிடைக்கும்.
- தடைப்பட்டிருந்த திட்டங்கள் அல்லது வேலைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
- புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கும்.
- இந்த நேரத்தில் நீங்கள் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு, அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- இந்த காலகட்டத்தில் சேமிப்பிலும் கவனம் செலுத்துவீர்கள். இது எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும்.
- ஒட்டுமொத்தமாக அடுத்த சில மாதங்களுக்கு ரிஷப ராசிக்காரர்கள் மகிழ்ச்சியையும், செழிப்பையும் பெறுவீர்கள்.
மிதுனம்
- கஜகேசரி ராஜ யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
- உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்க இருக்கிறது.
- இந்த ராஜயோகம் உங்கள் ஜாதகத்தின் லக்ன வீட்டில் உருவாகிறது.
- எனவே உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- ஆளுமை மிக்கவர்களாக மாறுவீர்கள்.
- உங்கள் புத்திசாலித்தனம் சிந்தனை திறன்கள் அதிகரிக்கும்.
- இதனால் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அடைவீர்கள்.
- திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும்.
- தம்பதிகளுக்கு இடையே புரிதல் மற்றும் அன்பு அதிகரிக்கும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு புதிய திருமண வரன்கள் கூடிவரும்.
- வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்குவீர்கள்.
- புதிய வீடு வாங்க அல்லது வீடு கட்ட நினைப்பவர்களின் கனவு நிறைவேறும்.
- வீட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிலவும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- ஒட்டுமொத்தமாக மிதுன ராசி நேயர்கள் முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
கன்னி
- கஜகேசரி ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
- குறிப்பாக தொழில் மற்றும் வணிக ரீதியாக நல்ல காலம் உருவாக இருக்கிறது.
- இந்த ராஜயோகம் உங்கள் கர்ம பாவத்தில் உருவாவதால் நீங்கள் வேலையில் வெற்றிகளை குவிப்பீர்கள்.
- புதிய தொடக்கங்கள், முக்கிய முடிவுகளை எடுத்து அதில் சாதித்து காட்டுவீர்கள்.
- புதிய வாகனம், வீடு போன்றவற்றை வாங்குவீர்கள்.
- வேலையில்லாமல் இருந்து வருபவர்கள் அல்லது குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
- தொழிலில் இருப்பவர்கள் சிறந்த ஆர்டர்களைப் பெறுவீர்கள்.
- இதன் காரணமாக நிதி அதிகரிக்கும்.
- தொழிலை விரிவுபடுத்தும் வேலைகள் சாத்தியமாகும்.
- உங்கள் நிதி ஸ்திரத்தன்மை வலுப்படும்.
- தந்தையுடன் உறவு சுமூகமாக இருக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
- இந்த நேரம் கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான செய்திகளை கொண்டு வரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)