- Home
- Astrology
- Astrology: கன்னி ராசியில் பிரவேசிக்கும் சுக்கிர பகவான்.! அக்.9 முதல் இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!
Astrology: கன்னி ராசியில் பிரவேசிக்கும் சுக்கிர பகவான்.! அக்.9 முதல் இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!
Sukra Peyarchi 2025: ஆடம்பரத்தின் கடவுளான சுக்கிர பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி கன்னி ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். அவரின் இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்கிர பெயர்ச்சி 2025
வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். அவர் அழகு, ஆடம்பரம், அன்பு, பொருள், வசதிகள், இன்பம், செல்வம் ஆகியவற்றிற்கு பொறுப்பான கிரகமாவார். சுக்கிர பகவான் வருகிற அக்டோபர் 9, 2025 காலை 10:38 மணிக்கு கன்னி ராசியில் பெயர்ச்சியாகிறார். புதன் பகவான் ஆளும் கன்னி ராசியானது சுக்கிர பகவானுக்கு பலவீனமான ராசியாகும். இருப்பினும் அங்கு ஏற்கனவே சூரிய பகவான் இருப்பதால் இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
- மிதுன ராசியின் ஐந்தாவது மற்றும் 12-வது வீட்டை சுக்கிர பகவான் ஆட்சி செய்கிறார்.
- அக்டோபர் 9 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசியின் நான்காவது வீட்டில் பெயர்ச்சியாகிறார்.
- சுக்கிரனின் இந்த நான்காவது வீட்டின் சஞ்சாரம் மங்களகரமானதாகவும், சாதகமானதாகவும் கருதப்படுகிறது.
- ஜாதகத்தில் நான்காவது வீடானது குடும்பம், தாய், மன அமைதி, சொத்துக்கள் ஆகியவற்றை குறிக்கிறது.
- எனவே சுக்கிர பகவான் நான்காவது வீட்டில் பெயர்ச்சியாவது உங்கள் பொருள் வசதிகளை அதிகரிக்கும்.
- உங்களுடைய அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவீர்கள்.
- சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.
- ஆடம்பரமான பொருட்கள், விலை உயர்ந்த கார் ஆகியவற்றை வாங்கும் யோகமும் கைகூடும்.
சிம்மம்
- சிம்ம ராசியின் 3-வது மற்றும் 10-வது வீடுகளை சுக்கிர பகவான் ஆட்சி செய்கிறார்.
- அக்டோபர் 9 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியின் இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார்.
- இரண்டாவது வீடு என்பது தனம் அல்லது செல்வத்தின் வீடாகும்.
- இதன் காரணமாக நீங்கள் செல்வத்தையும், சொத்துக்களையும் குவிக்க இருக்கிறீர்கள்.
- உங்கள் நிதி நிலைமை கணிசமாக மேம்படும்.
- வரவிருக்கும் காலம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். எ
- ந்த துறையை எடுத்தாலும் அதில் மகத்தான சாதனைகளைப் படைப்பீர்கள்.
- செல்வத்தின் காரகரான சுக்கிரன், செல்வ வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் செல்வ வளத்தை கணிசமாக அதிகரிக்கும்.
கன்னி
- கன்னி ராசியின் இரண்டாவது மற்றும் ஒன்பதாவது வீடுகளை சுக்கிரன் ஆட்சி செய்கிறார்.
- இரண்டாவது வீடு செல்வத்தையும், ஒன்பதாவது வீடு அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது.
- இந்த நிலையில் கன்னி ராசியின் லக்ன வீட்டின் வழியாக சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார்.
- இதன் காரணமாக உங்கள் நிதி சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் வசம் இருக்கும்.
- உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- நீங்கள் பணம் சேமிப்பதில் வெற்றியைப் பெறுவீர்கள்.
- அனைத்து வகையான பொருள் வசதிகளையும் அனுபவிப்பீர்கள்.
- அடுத்த சில வாரங்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது.
விருச்சிகம்
- சுக்கிரனின் கன்னி ராசி பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும்.
- விருச்சிக ராசியின் ஏழாவது மற்றும் 12-வது வீடுகளை சுக்கிரன் ஆட்சி செய்கிறார்.
- அக்டோபர் 9 ஆம் தேதி சுக்கிரன் 11-வது வீட்டுக்குள் நுழைய இருக்கிறார்.
- ஜாதகத்தில் ஒருவரின் 11-வது வீடு என்பது மிகவும் மங்களகரமான வீடாக கருதப்படுகிறது. இந்த வீடானது லாப ஸ்தானமாக கருதப்படுகிறது.
- சுக்கிரன் உங்கள் லாப ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைய இருப்பதால், நேர்மறையான பலன்கள் அதிகரிக்கும்.
- உங்கள் லாபம் கணிசமாக உயரும்.
- எதிர்பாராத பண வரவால் சேமிப்பைத் தொடங்குவீர்கள்.
- புதிய சொத்துக்கள், நிலம், வீடு, வாகனத்தை வாங்குவீர்கள்.
- ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)