இன்று மாசி அமாவாசை.. இரவுக்குள் இந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்தால் கட்டாயம் நினைத்த காரியம் அமோகமாக நடக்கும்
Masi Amavasai 2023;; மாசி அமாவாசை அன்று இரவுக்குள் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் நினைத்த காரியம் அமோகமாக நடைபெறும்.
இன்று மாசி அமாவாசை. 2023ஆம் ஆண்டில் வரும் மாசி அமாவாசையில் இறுதி ஒரு மணி நேரத்தில் சதயம் நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரம் பித்ருக்களுக்கு ஏற்றது. இப்போது படையல் போட்டு பித்ருக்களை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்பார்கள். அமாவாசை அன்று பிரபஞ்சம் நேர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும். இன்றைய தினம் குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற நாள். இன்றைய நாளில் குறிக்கோள்களை அடைய சில ஆன்மீக காரியங்களில் ஈடுபடலாம். அதை முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சோடச கலை நேரம் அமாவாசை நாள் அன்று இருக்கும். இந்த அதி அற்புதமான நேரத்தைக் குறித்து சித்தர்கள் சொல்லியிருக்கின்றனர். மாசி அமாவாசையான இன்றைய தினம் அந்த சோடச கலை நேரம் எப்போது வருகிறது, அதை எப்படி உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்தால் பல அற்புத பலன்களை நீங்கள் பெறமுடியும்.
கர்ம வினை கரைய பரிகாரம்
நமது கர்ம வினைகளுக்கான பலனை நிச்சயம் நாம் அனுபவிப்போம். நல்லது, கெட்டது என்பதெல்லாம் கர்மவினையின் பயன்கள்தான். சில கர்ம வினைகளின் எதிர்வினைகளை குறைக்க எவ்வளவோ பரிகாரங்களை முயன்றிருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவான பரிகாரம், அன்னதானம் தான். இதை எளிமையாக செய்து முடிக்க முடியும். உங்களுடைய கையால் லட்சம் உயிருக்கு அன்னமிட்டால் எந்த கர்மவினையும் குறையும் என்கிறது சாஸ்திரம்.
எறும்புகளை நேசியுங்கள்
யோசித்து பார்த்தால் அந்த ஒரு பரிகாரம் செய்ய எல்லோருக்கும் வசதி இருக்காது. நாம் வசதியில்லாத எளிய பிள்ளைகள். ஆனால் ஒரு லட்சம் எறும்புகளுக்கு உணவளிக்க நம்மால் முடியும்தானே? அது கடினமல்ல. இன்றைய மாசி அமாவாசை தினத்தில் அருகாமையில் உள்ள கோயிலுக்கு போங்கள். பச்சரிசியுடன் வெல்லம் கலந்து வீட்டில் இருந்து கொண்டு செல்லுங்கள். இறை வழிபாட்டிற்கு பின் கோயிலில் உள்ள மரங்கள், புற்றுக்கு அருகில் கொண்டு சென்ற பச்சரிசி வெல்லத்தை உங்கள் கையால் வைத்துவிட்டு வீடு திரும்புங்கள்.
இதையும் படிங்க: யார் யாருக்கு ராஜயோகம்.. பல நூற்றாண்டுகளுக்கு பின் 4 ராசிகளுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?
சோடசக்கலை வேண்டுதல்
சோடசக்கலை நேரத்தில் முக்கியமாக செய்ய வேண்டியவற்றை அறிந்து கொள்வது அவசியம். உங்களுடைய வீட்டில் எந்த அரவமும் இல்லாத அமைதியான இடத்தில் அமருங்கள். அதன் பிறகு பிரபஞ்ச ஆற்றலை நினைத்து, எம்பெருமானை மனமுருகி நினைந்து தேவையான வரங்களை நேர்மறையாக கேளுங்கள். எப்படி கேட்பது என்ற கேள்வி எழுகிறதா? மிகவும் எளிமையான விஷயம் தான். உங்களுடைய தேவைகளை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக... பணம் நிறைய சம்பாதிக்க விரும்புபவர்கள், ஏற்கனவே நிறைய பணம் சம்பாத்தித்துவிட்டதாகவும், தொழில் விருத்தி அடைந்துவிட்டதாகவும், செல்வ செழிப்பாக வாழ வேண்டும் எனவும் நேர்மறையாக நினைத்து மனமுறுகி மன ஒருமைப்பட்டு கேட்டுப்பாருங்கள்.
சோடசக்கலை நேரம் எப்போது?
இன்று தான் விசேஷமான மாசி அம்மாவாசை. இன்றைய தினம் மதியம் 12.47 மணி தொடங்கி 2.47 மணி வரை சோடசக்கலை நேரமாகும். இந்த நேரம் தான் ஏதேனும் ஐந்து வினாடிகள் மும்மூர்த்திகளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்குமாம். மொத்தமே ஐந்து வினாடிதான். ஆனால் அது எந்த ஐந்து வினாடி என்பது நமக்கு தெரியாது. அதனால் இந்த இரண்டு மணி நேரம் மனதை ஒரு முகமாக வைத்து மும்மூர்த்திகளிடம் வேண்டி வரம் கேளுங்கள்.
எப்படி வழிபடுவது?
உங்களுக்கு விசேஷமான மந்திரங்களை சொல்லி ஜெபிக்க தெரியாவிட்டால் வெறுமனே கண்ணை மூடி இரண்டு மணி நேரமும் மனதை ஒருமுகம் செய்யுங்கள். ‘ஓம் ரீம் சிவசிவ’ எனும் மந்திரத்தை மட்டும் உச்சரியுங்கள். நீங்கள் கேட்கும் வரங்களை சிவபெருமான் வழங்கிவிடுவார். ஒரே மாதத்தில் சாத்தியமாகாது. ஒவ்வொரு மாதமும் இதனை அமாவாசை அன்று செய்ய வேண்டும். அதை சரியாக செய்தால் வாழ்வில் வெற்றி கிடைப்பது உறுதி.
இதையும் படிங்க:மாசி அமாவாசை 2023: எப்போது? எப்படி விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கி முழுப்பலன் கிடைக்கும்..