Asianet News TamilAsianet News Tamil

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை; ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான  மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை நேற்று கோலாகலமாக நடைபெற்றது . 
 

madurai koodal azhagar perumal temple pournami festival held very well
Author
First Published Oct 10, 2022, 11:04 AM IST

சில கோவில்களில் ஐந்துக்கும் அதிகமான கருடசேவைகள் ஒருநாளில் நிகழ்த்தினாலும் புரட்டாசி பௌர்ணமிக்கு கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மட்டும் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு. 

அந்த வகையில் நேற்று நடைபெற்ற  ஐந்து கருட சேவையில், முன்னதாக, கூடலழகர் பெருமாள் கோவிலில் இருந்து தங்கக்கருடவாகனத்தில் வியூக சுந்தரராசப்பெருமாளும், மற்றொரு கருடவாகனத்தில் கூடலழகரும் எழுந்தருளினர். இதே போன்று மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து வீரராகவப் பெருமாளும், வடக்குமாசிவீதியிலுள்ள வீரராகவப்பெருமாள் கோவிலில் உள்ள உற்சவரான ரெங்கநாதரும், மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பிலுள்ள மதனகோபாலசாமி கோவிலிலிருந்து மதனகோபால சாமியும் கரு வாகனத்தில் கூடலழகர்கோயில் முன்பு எழுந்தருளினர் . 

வசூல் ராஜா பட பாணியில் ப்ளூ டூத் மூலம் ராணுவ தேர்வு..! வட மாநில இளைஞர்கள் 29 பேர் சென்னையில் கைது

தொடர்ந்து  நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையில்  எழுந்தருளிய பெருமாளுக்கு மஹா தீபராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐந்து கருடவாகனங்களில் பெருமாள் மாசிவீதிகளை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios