இதுக்காக தான் சீத்தாப்பழம் என்று பெயர் வந்ததா? சீத்தா மரம் எப்படி உருவானது தெரியுமா?

ராமாயணத்தில் சீதைக்கும் சீதா பழத்துக்கும் என்ன தொடர்பு தெரியுமா? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

Is this why it got its name as seethapalam? Do you history of seetha tree? Rya

பழங்கள் என்றாலே ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்கள் தான் நினைவுக்கு வரும். சீத்தாப்பழம் என்று ஒரு பழம் இருக்கிறதே என்றே பலருக்கும் தெரியாது. அப்படியே அந்த பழந்தை தெரிந்திருந்தவர்கள் கடையில் பார்த்தாலும், அதன் சுவை எப்படி இருக்குமோ என்று எண்ணி அதனை வாங்குவதை தவிர்த்துவிடுவார்கள்.. ஆனால் இந்த சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட பல சட்துக்கள் உள்ளன. 

ஆனால் இந்த பழத்திற்கு ஏன் சீத்தாப்பழம் என்று பெயர் வந்தது? ராமாயணத்தில் சீதைக்கும் சீதா பழத்துக்கும் என்ன தொடர்பு தெரியுமா? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். ராமர் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை பார்த்து கொள்ளும் படி லட்சுமணனிடன் கூறிவிட்டு, விறகுவெட்ட சென்றுவிட்டாராம். ஆனால் நீண்ட நேரமாகியும் ராமர் வராததால் லட்சுமணன் சீதையை பாதுகாப்பாக இருக்கும்படி கூறிவிட்டு ராமனை தேடி புறப்பட்டாராம்.

ஆனால் இருவரும் வர தாமதமானதால் பயந்துபோன சீதா, அழுதுகொண்டே அவர்களை தேடி காட்டுப்பாதையில் சென்றாராம். சீதாவின் கண்ணீர் அவர் சென்ற வழியெங்கும் ஆங்காங்கே விழுந்ததாம். இறுதியில், ராமரை கண்ட சீதை மகிழ்ச்சியில் ஆரத்தழுவி கொண்டாராம். அந்த நேரத்தில் லட்சுமணனும் அங்கு வந்த உடன் மூவரும் குடிலுக்கு புறப்பட்டார்களாம்.

கோவில்களை பாதுகாக்கும் 'யாளி' சிற்பங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆனால் வெகுதூரம் நடந்து வந்ததால் களைத்திருந்த சீதையை ராமர் தன் தோளில் சுமந்து சென்றாராம்.  இதனால் ராமருக்கு உடம்பெல்லாம் வியர்த்து, வியர்வைத் துளிகள்  கீழே சிந்தியதாம். சீதையின் கண்ணீர் விழுந்த இடத்திலும், ராமரின் வியர்வை விழுந்த இடத்திலும் செடிகள் துளிர்விட்டு வளர்ந்தன. காடு முழுவதும் இந்த மரங்கள் இரண்டும் தனித்தனியாக செழித்து வளர்ந்து பசுமையாக இருந்ததாம்.

இதைக் கண்ட ராமர் ஒரு மரத்திற்கு சீதை என்று பெயரிட்டாராம். சீதை தேவியோ இன்னொரு மரத்திற்கு ராமர் என்று பெயரிட்டாராம். இப்படித்தான் இந்த சீதை மரம் உருவானது என்று கதைகள் கூறுகின்றன. அதனால்தான் பழ வகைகளில் சீதா மரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து காரணமாக பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பெண்கள் அடிக்கடி சீத்தாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்.  இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளுக்கு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் திறன் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். மன அழுத்தத்தைக் குறைக்க நம் உடலுக்கு அதிக வைட்டமின் சி தேவைப்படுகிறது. சீத்தாப்பழம் சாப்பிட்டால் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம். செரிமான சக்தியை அதிகரிக்கும் இந்த பழம் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் போன்றவற்றை குணப்படுத்தும் அற்புத சக்தி கொண்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios