ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதற்கு இதுதான் காரணமா?

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதற்கும் பின்னணியிலும் அறிவியல் உள்ளது.

Is this the reason for pouring koozh on the goddess in the month of Adi?

ஆடி மாதம் என்றாலே ஆன்மீக ரிதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாதம். வழிபாட்டிட்ற்கு உரிய மாதம். விவசாயத்திற்கு நீர் வரத்து அதிகரிக்கும் மாதம். அம்பாளுக்கு உரிய மாதம். அதற்காகவே அம்பிகையை கொண்டாடுவோம் என்று சொல்லி வழிபட வைத்தனர். ‘ ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று விவசாயத்தை சொல்லி வைத்தனர். ஆடிப்பிறப்பு தொடங்கி, ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடி கிருத்திகை, ஆடி தபசு, ஆடி பெருக்கு என பல விசேஷங்கள் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் இன்று ஆடிப்பிறப்பு. அம்மனுக்கு உரிய ஆடி மாதத்தில்அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவது விசேஷமாகும். ஆனால் ஆடி மாதத்தில் ஏன் கூழ் ஊற்றப்படுகிறது தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்றைய நவீன கால கட்டத்தில் காரணம் புரியாமலே சில விஷங்களை செய்து வருகிறோம். ஆனால் நமது முன்னோர்களின் ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கு பின்பும் அறிவியல் உள்ளது . அந்த வகையில் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதற்கும் பின்னணியிலும் அறிவியல் உள்ளது. ஆம். ஆடி மாதம் என்பது காற்றும் மழையுமாக இருக்கும். ஆடி மாதத்தில் தான் மழைக்காலம் தொடங்கும். இந்த பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு என்பதால் தான் ஆடி மாத வழிபாடுகளில் வேப்பிலையும் எலுமிச்சையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அம்மை நோய் என்பது அதிகமாகக் காணப்படும். தற்போது அம்மை நோய் பாதிப்பு இல்லை என்றாலும் 100 ஆண்டுகளுக்கு முன்பு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக, ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை காரணமாக, இந்த மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இருமல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு வலி வகுக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குளிர்ச்சி தேவை என்பதால், இந்த நேரத்தில் கம்பு மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தி வந்தனர்.

எனவே நோய்கள் தீரவும், நோய் எதிர்ப்ப் சக்தியை அதிகரிக்கவும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கம்பு, கேழ்வரகு இருப்பு வைத்துள்ளவர்கள் அனைவரும் அம்மனுக்கு கூழ் ஊற்ற வேண்டும் என்று சொல்லி வைத்தனர். இதன் மூலம் ஏழை எளியோர் பசியை ஆற்றவும் இந்த கூழ் உதவியது. இதன் காரணமாகவே வேப்பிலை, மஞ்சள் நீர், வைத்து அம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இதனால், ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆடி பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் சிறப்பு என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios