பித்ரு பட்ச மாதத்தில் குழந்தை பிறப்பது நன்மையா..?? தீமையா...??
தமிழ்நாட்டில் பித்ரு பட்சத்தை நாம் மஹாளய அமாவாசை என்று குறிப்பிடுகிறோம். அன்றைய நாளில் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் பாரம்பரியத்தை நாம் பின்பற்றி வருகிறோம். தசராவின் துவக்கத்தைக் குறிப்பது தான் மஹாளய அமாவாசை. இது நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நமது நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக உள்ளது. இந்நேரத்தில் ஆவிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்றும், அப்படிப்பட்ட நாளில் குழந்தை பிறந்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற நம்பிக்கை பலரிடையே உள்ளது. இதனால் திருமணம் தேதி, சாந்தி முகூர்த்தம் உள்ளிட்டவற்றை பார்த்து பார்த்து அரூடர்களை கொண்டு குறிக்கப்படுகிறது. பித்ரு பட்சத்தில் குழந்தை பிறந்தால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமா என்பதை விரிவாக பார்க்கலாம்.
பித்ரு பட்சம்
ஆங்கில நாள்காட்டிப் படி செப்டம்பர் 10-ம் தேதி துவங்கும் பித்ரு பக்ஷம் செப்டம்பர் 25-ம் தேதி நிறைவடைகிறது. இந்நாளில் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பிண்டம் வைத்து வழிபடுவோம். இந்த 15 நாள் பித்ரு பக்ஷத்தின் போது நம்முடைய மூதாதையர்களாக நினைத்து பசுக்கள், பறவைகள் மற்றும் நாய்களுக்கு உணவளிக்கும் மரபும் உள்ளது. குறிப்பிட்ட இந்த நாளில் மங்களமாரான காரியத்தை எதையும் செய்யமாட்டார்கள். அன்றைய நாளில் முன்னோர்களின் ஆன்மா தங்கள் வாழ்ந்த வீட்டுக்கு வந்து, நமது உற்றார் உறவினர்களிடம் நேரம் செலவழிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அதேநேரத்தில் குழந்தைப் பேறு பெறுவதை சிலர் அசுபமாகக் கருதுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் குழந்தைப் பிறப்பு அமைந்தால், அது நன்மையாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முறையாகத் தெரிந்துகொள்வோம்.
மஹாளய அமாவாசை- குழந்தை பிறப்பு
அரூட அறிஞர்களின் கூற்றுப்படி, பித்ரு பட்சத்தில் குழந்தை பிறப்பது மிகவும் சிறப்பானது. அன்றைய நாளில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாகவே ஆக்கத்திறன் கொண்டிருக்கும். எதிர்காலத்தில் படைப்பாற்றல் சேர்த்த துறையில் பெரும் புகழ் பெற்று விளங்கும். அந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் முன்னோர்களின் ஆசியையும் வாழ்த்துக்களையும் பெற்று பிறப்பதாக ஆருடக்காரர்கள் கூறுகின்றனர். இவ்வளவு சிறப்புகளுடன் பிறக்கும் குழந்தைகள் குடும்பத்துக்கு நன்மைகளை கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
திருப்பதி சென்றால் திருப்பம் வருவது உண்மையா?
பித்ரு பட்சத்தில் பிண்டம் வைப்பதன் சிறப்பு
பித்ரு பட்ச மாதத்தில் முன்னோர்கள் தங்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். முன்னோர்கள் பசு, நாய், பூனை, காகம் போன்ற எந்த வடிவத்திலும் தங்கள் குடும்பத்தை சந்திக்க வருவார்கள் என்று நம்பப்படுகிறது. எனவே, பித்ரு பட்ச மாதத்தில், மக்கள் யாரையும் தங்கள் வீடுகளில் இருந்து வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப மாட்டார்கள். இதன் காரணமாகவே பித்ரு பக்ஷ மாதத்தில் பிண்டம் மற்றும் ஷ்ராத்தம் முதலியவை இல்லறத்தின் மகிழ்ச்சிக்காகவும் செழிப்பிற்காகவும் செய்யப்படுகின்றன.
அவ்வையும் முருகனும் நமக்கு கற்றுத்தந்தது இதுதான்!
குழந்தை பிறப்பும் முன்னோரின் வருகையும்
பொதுவாகவே ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள், தங்களுடைய முன்னோர்களின் ஆசியைக் கொண்டிருக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது. குழந்தை பிறந்த பின்பு, முன்னோர்களின் புகைப்படத்திடம் குழந்தையை கடத்தி ஆசிர்வாதம் பெறும் முறையும் நம்முடைய மரபில் உண்டு. மாஹாளாய மாசத்தில் தாங்கள் வாழ்ந்த வீட்டுக்கு வந்து பார்க்கும் முன்னோர்கள், அவர்களுடைய அடுத்த தலைமுறையினர் எப்படி வாழ்கிறார்கள்? தங்களை தற்போதைய தலைமுறையினர் நினைவில் கொள்கின்றனரா? தாங்கள் தங்களுடைய குடும்பத்திற்காக உழைத்ததற்கு அடுத்த தலைமுறையினர் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்களா? உள்ளிட்டவற்றை வந்து கண்காணிப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
ராகு கேது தோஷம் இருக்கா.. இதை செய்யுங்க!
பித்ரு பட்சத்தில் பிறக்கும் குழந்தை முன்னோர்களின் ஆசிப்பெற்று வளரும். இது அவர்களுடைய தலைமுறை தழைத்தோங்கி வளருவதற்கு வழிவகுக்கும். இதன் காரணமாக, பிறக்கும் குழந்தை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். இயல்பாகமவே மிகவும் புத்திசாலி மற்றும் படைப்பாற்றலுடன் வளரும் என்று அரூட அறிஞர்கள் கூறுகின்றனர்.