தை அமாவாசையில் இதை தானம் செய்யுங்க.. சனீஸ்வர் அருளை வாரி வழங்குவார்
Thai Amavasai 2023: தை அமாவாசை அன்று, ஒவ்வொரு ராசிக்காரரும் சனீஸ்வரருக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இங்கு காணலாம். முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாள், தை அமாவாசை.
இந்து சாஸ்திரங்களின்படி, மாதம்தோறும் வருகிற அமாவாசை சிறப்பானது என்றாலும், தை அமாவாசை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொங்கல் விழாவிற்கு பின்னர் சனி பகவான் தன்னுடைய சொந்த ராசி கும்பத்திற்கு சஞ்சாரம் செய்த பிறகு வெறும் 4 தினங்களிலேயே வரும் அமாவசை, நாளை (சனியன்று) வருவது கூடுதல் சிறப்பாக கூறப்படுகிறது. வாழ்வில் சந்திக்கும் அனைத்து இன்னல்களும் நீங்க சனி அன்று வரும் தை அமாவாசையில் தானம் செய்தால் சனி பகவானின் அருளை பெறலாம்.
முன்னோரின் கர்மாவை நிறைவேற்றி அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய தை அமாவாசையில் தர்ப்பணம் வைத்து தானம் வழங்குவர். அதை போல ஒவ்வொரு ராசிக்காரரும் சனீஸ்வரன் மனம் குளிர தானம் செய்தால், அவர் கர்ம செயல்களுக்கு ஏற்ற பலன்களை பெறலாம். எந்தெந்த ராசிக்காரர்கள் நாளை என்ன பரிகாரம் செய்வதால், சனீஸ்வரர், முன்னோரின் நல்லாசி பெறலாம் என இங்கு அறிந்து கொள்ளலாம்.
- மேஷம்- அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். அன்ன தானம் வழங்கினால் நல்லது.
- ரிஷபம் -ஏழைகளுக்கு அன்னமிடுங்கள்.
- மிதுனம் - கோயிலுக்கு வெளியே வாழும் எளியோருக்கு ஆடை தானம் கொடுக்கலாம்.
- கடகம் - சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.
- சிம்மம் - முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, உதவி கேட்பவர்களுக்கு உறுதுணையாக உதவுங்கள்.
- கன்னி - சனீஸ்வரருக்கு எள் எண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
இதையும் படிங்க: கவலைகள் நீக்கும் 'தை' மாத முக்கிய விரதங்கள் எப்போது இருக்க வேண்டும்? என்னென்ன பலன்கள் முழுவிவரங்கள்!
- துலாம் -மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். நல்ல பலன் பெறுவீர்கள்.
- விருச்சிகம் - அனுமனை வணங்கி, பூந்தி பிரசாதம் நிவேதனம் அளிக்க வேண்டும். பக்தர்களுக்கு அதனை பிரசாதமாக கொடுங்கள்.
- தனுசு - முன்னோருக்கான கடமைகளை முடித்த பிறகு, அன்னதானம் அளித்தால் வாழ்க்கை செழிப்பாகும்.
- மகரம் - கோயிலுக்கு சென்று சிவனை வணங்கி விட்டு, அன்னதானம் கொடுங்கள்.
- கும்பம் - சனி பகவானுக்கு தீபம் ஏற்றி, எள் சாதம் தானமாக கொடுங்கள்.
- மீனம் - கோயிலில் நவகிரக வழிபாடு செய்து தேவையில் இருப்பவர்களுக்கு தானம் செய்யுங்கள்.
இதையும் படிங்க: பித்ரு சாபம் நீக்கும் தை அமாவாசை தர்ப்பணம்.. எந்த நேரத்தில் செய்ய வேண்டும்? தானம் அருளும் புண்ணியம்