கவலைகள் நீக்கும் 'தை' மாத முக்கிய விரதங்கள் எப்போது இருக்க வேண்டும்? என்னென்ன பலன்கள் முழுவிவரங்கள்!

thai matha viratham: தைமாதத்தில் இருக்க வேண்டிய விரதம், அப்படி இருப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு காணலாம். 
 

thai matha viratham 2023 dates in tamil Ekadasi viratham 2023  in tamil thai amavasai date

புராணங்களில் புண்ணியமாக கருதப்படும், தை மாதத்தின் முதல் நாள், சூரிய பகவான் தேர்ப்பாதை வடதிசையில் மாறி வரும் உத்தராயண காலம் தொடங்கும். இம்மாதம் பல புண்ணிய தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த மாதத்தில் தான் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி ஆகியவையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி போன்ற வழிபாடுகளும் செய்யப்படும். தைமாதத்தில் இருக்க வேண்டிய விரதம், அப்படி இருப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு காணலாம். 

ஜனவரி 30ஆம் தேதி அன்று முருகனுக்கு உகந்த தைக்கிருத்திகை வழிபாடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. சஷ்டி விரதம் முக்கியத்துவம் உள்ளது. 27 நட்சத்திரங்களில் முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் உகந்தது. ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு வழிபாடு நடத்துவதற்கு உகந்த நாள். ஒவ்வொரு ஆண்டிலும் உத்தராயன தொடக்கமான தை மாதத்தில் உள்ள தை கிருத்திகை, கார்த்திகையில் வரும் கிருத்திகை, தட்சிணாயன தொடக்கமான ஆடிக் கிருத்திகை ஆகிய மூன்று கார்த்திகை தினங்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. 

தை கிருத்திகை விரதம்! 

தையில் உள்ள கிருத்திகையில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் திருமண தடை நீங்குமாம். இந்த விரதத்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கந்தவேலை தை கிருத்திகையில் விரதமிருந்து வேண்டினால் கவலைகள், பிரச்சனைகள் தீர்ந்து வளமான வாழ்க்கையை பெறலாம். 

ஏகாதசி விரதமும் தை பூசமும்! 

தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதேசியில் விரதம் இருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல குணமுள்ள புத்திரர்கள் கிடைப்பார்கள். இந்தாண்டு பிப்ரவரி 4ஆம் தேதியில் தைப்பூசம் கொண்டாடப்படவுள்ளது. தையில் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் சிவபெருமான், முருகனை மனமுருகி வேண்டி கொள்வது நல்லது. சிதம்பரம் பொன்னம்பலத்தில் கடவுள் ஆடலரசனாக மக்களுக்கு காட்சி கொடுத்த தினமே தைப்பூசமாகவும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேல் கொடுத்த தினம் தைப்பூசமாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: 'சரும நிறத்தை இழக்கிறேன்'புது நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை உருக்கம் இந்த அறிகுறிகள் தான் காரணமா?

தை அமாவாசை! 

இந்தாண்டு தை அமாவாசை ஜனவரி 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். தை மாதத்தில் வரும் அமாவாசையும், ஆடி மாத அமாவாசையும், புரட்டாசி மாத அமாவாசையும் தான் முன்னோர் வழிபாடுக்கு ஏற்றது. இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் பாவங்கள் நீங்குவதோடு, குழந்தைபேறு, குடும்ப அமைதி உள்ளிட்டவை கிடைப்பதாகவும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.  

வீரபத்ர வழிபாடு 

இந்த வழிபாடு செவ்வாய்தோறும் ஒரு ஆண்டு முழுவதும் பின்பற்றப்படுகிறது. தொடர்ந்து ஒரு வருட காலம் வழிபாடு செய்ய முடியாதவர்கள், தை மாத செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழிபாட்டினை செய்யலாம். இதனால் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.  

தை வெள்ளிக்கிழமை! 

தை மாத வெள்ளிக்கிழமைகளில் தான் கற்பகாம்பாளுக்கு பிராகார உலா வருவார்கள். இந்தாண்டில் ரத சப்தமி ஜனவரி 28ஆம் தேதியில் வரும். ரதசப்தமிக்கு அடுத்த தினமே அஷ்டமி திதியாகும். இதனை பீஷ்மாஷ்டமியாக பின்பற்றுகிறார்கள். கிட்டத்தட்ட 58 தினங்கள் அம்புபடுக்கையில் படுத்த நிலையில் கிடந்த பிதாமகர் பீஷ்மர் பரமாத்மாவின் கடாக்ஷத்தால் ஸ்ரீ வைகுண்ட ப்ராப்தி அடைந்த தினம். அன்றைய தினத்தில் வேதங்களை கற்ற வித்யார்த்திகள் எல்லோருமே பிதாமகருக்கு தர்ப்பணம் செய்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். இந்த தினத்தில் புனித நீர்நிலைகளில் பீஷ்மருக்கான தர்ப்பணம், முன்னோருக்கு பிதுர் பூஜை செய்து வழிபட்டால் நிலைத்த செழிப்பான வாழ்க்கை கிடைக்கும். தை மாதத்தில் செய்ய வேண்டிய விரதங்களை தவறாமல் செய்து அதனுடைய பலன்களை பெற்று மகிழுங்கள். 

இதையும் படிங்க: குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி படாமல் இருக்க கட்டாயம் கண்மை வைக்கணுமா? உண்மை பின்னணி என்ன? 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios