உண்மையிலேயே அதிசயம் தான்.. சிலைக்குள் செல்லும் பூ! இந்த பூ விழுங்கி விநாயகர் பற்றி தெரியுமா?
இந்த கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் திருச்சிற்றம்லத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு புராதன வனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
வளமான பாரம்பரிய வரலாறு கொண்ட நம் நாட்டில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. குறிப்பாக பல வினோத செயல்கள் நடைபெறும் தலங்களும் பல உள்ளன. சில புராதன கோயில்களில் நிகழும் அதியங்களுக்கு இன்றும் விடை கிடைக்காமல் உள்ளது. அந்த வகையில் ஒரு அதிசய கோயில் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம். இந்த கோயிலில் உள்ள விநாயகருக்கு பூ வைத்தால் அது உள்ளே சென்றுவிடுமாம். அப்படி சென்றால் நாம் நினைத்த காரியம் கைக்கூடும் என்று அர்த்தமாம்.
இந்த கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் திருச்சிற்றம்லத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு புராதன வனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் மதுரை சவுண்ட கோப்பா கேசவர்மன், ராஜகேசரிவர்மன், ராஜேந்திர சோழதேவன், திரிபுவன சக்ரவர்த்தி, ராஜராஜ தேவன், வரகுண மகாராஜன், வீர பாண்டியன், சுந்த் பாண்டியன ஆகிய மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளதாக அந்த கோயிலில் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
தேங்காய் இப்படி உடைந்தால் துன்பம் நீங்கி, செல்வம் பெருகுமாம்.. தேங்காய் உடையும் பலன்கள் இதோ
இந்த தலத்தில் விநாயகர் சிலை தனிச்சிறப்பு வாய்ந்தது. பெரியநாயகி அம்மன் சன்னதியில் வலதுபுறம் சிறு விநாயகர் சிலை உள்ளது. இதற்கு பூ விழுங்கி விநாயகர் என்று பெயர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற மனதார பிரார்த்தனை செய்து, அவரின் காது துவாரத்தில் பூவை வைக்க வேண்டும். தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் எனில் விநாயகர் காதில் வைத்த பூ உள்ளே சென்றுவிடும்.
ஒருவேளை பூ தாமதமாக சென்றால் காரியமும் தாமதப்படும். ஆனால் காரியங்கள் நிறைவேறாது என்றால் செகளில் வைக்கப்பட்ட பூ அப்படியே இருக்கும். பக்தர்கள் அனுபவத்தால் இந்த உண்மையை அறிந்ததாக சொல்கின்றனர். மேலும் இதுதொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.