Today Rasi Palan : அக்டோபர் 09, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம்.
எனவே கவனத்துடன் இருக்க வேண்டும். வேலைகளில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம் அல்லது உங்கள் பணிகளில் தாமதம் ஏற்படலாம்.
முடிவுகளை அவசரப்பட்டு எடுக்காமல் பொறுமையை கையாள வேண்டும்.
மற்றவர்கள் பேச்சை கேட்பதை நிறுத்திவிட்டு, உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டால் தெளிவான முன்னேற்றத்தை காணலாம்.
பணியிடத்தில் மூத்த அதிகாரிகளுடன் சிறு சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.
நிதி நிலைமை:
நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பதில் தெளிவின்மை இருக்கலாம்.
எனவே அவசரமாக எந்த நிதி முடிவையும் எடுக்காதீர்கள்.
பண விஷயங்களில் பொறுமை தேவை. அவசர முடிவுகளை தவிர்த்து விடுங்கள்.
பட்ஜெட்டில் உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து கொள்வது நல்லது.
நிதானமான மற்றும் நிலையான அணுகுமுறை நிதி ஸ்திரத்தன்மைக்கு உதவும்.
முதலீடுகள் குறித்து இன்று கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறவுகளில் இன்று சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
ஆனால் பொறுமையாக கையாள்வதன் மூலம் அவற்றை சரி செய்யலாம்.
எல்லாவற்றையும் இன்றே சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
எனவே பொறுமை காப்பது நல்லது. உங்கள் துணையுடன் உண்மையாகவும், அன்பாகவும் இருங்கள்.
தனியாக இருப்பதை தவிர்த்து விட்டு மனதிற்கு பிடித்தவர்கள், அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுவது நல்லது.
பரிகாரங்கள்:
உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவானை வணங்கலாம்.
விஷ்ணு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
மன அமைதிக்கு தான தர்ம காரியங்களில் ஈடுபடலாம்.
ஏழை எளியவர்கள், இயலாதவர்களுக்கு உதவி செய்நாள் அன்னதானம் வழங்குவது பலன்களைக் கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.