Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஒரு தேங்காய் போதும்.. நம் வேண்டுல் அனைத்துமே நிறைவேறும்.. எந்த தடையும் இருக்காது..

தேங்காயை வைத்து பரிகாரம் செய்தால் நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

Coconut Pariharam in Tamil Just do this with coconut.. all our wishes will be fulfilled.. Rya
Author
First Published Oct 4, 2023, 4:27 PM IST

பூமியின் கற்பகவிருட்சம் தான் தென்னை மரங்கள் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தான் பூஜை என்று சொன்னாலே அதில் தேங்காய் இன்றியமையாத பொருளாக உள்ளது. தேங்காய் இல்லாமல் எந்த வித பூஜை, யாகம், வழிபாடோ நடக்காது. எனவே இந்த தேங்காயை வைத்து பரிகாரம் செய்தால் நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படிப்பட்ட ஒரு பரிகாரம் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

பொதுவாக நாம் ஒரு காரியத்தை செய்வதற்கு முன், விநாயகருக்கு தேங்காய் உடைத்தால் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை பலருக்கும் உள்ளது. மேலும் தேங்காய் மூன்று கண்களைக் கொண்டிருப்பதால் சிவபெருமானுக்கு இணையானதாக கருதப்படுகிறது. மேலும் சக்தியின் அம்சமான மஞ்சளை அதில் பூசினால் தேங்காய் அர்த்தநாரீஸ்வரராக திகழ்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நம் வீடுகளில் இன்று வரை இன்று வரை இந்த தேங்காயை வைத்து பல சடங்குகள், பரிகாரங்கள் செய்து வருகிறோம். மேலும், தெய்வத்திற்கு தேங்காய் உடைக்கும் போது, அது பூ இருந்தால் நல்ல சகுனம் எனவும், அது அழுகியிருந்தால், அது கெட்ட சகுனம் மற்றும் சகுனத்திற்கு தேங்காயை பயன்படுத்துகிறோம்.

இப்படி பல அற்புதமான சக்திகள் மற்றும் ஆன்மீக அர்த்தங்கள் கொண்ட தேங்காயை கொண்டு எளிய பரிகாரம் செய்தால், அந்த பரிகாரம் நம் விருப்பத்தை நிறைவேற்றும். அந்த பரிகாரம் என்னவென்று பார்ப்போம். புதன்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் தேங்காய் வாங்கி, அதனை வீட்டின் வடகிழக்கு மூலையான ஈசானிய மூலையில் வைக்க வேண்டும்.

உங்கள் வீட்டின் பூஜையறை இந்த திசையில் மட்டும் இருக்கவே கூடாது.. குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும்..

மறுநாள் காலை 3 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து சுத்தமாக குளித்து தேங்காயை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். விநாயகரிடம் நம் வேண்டுதலை வைத்துவிட்டு, சிதறு தேங்காயாக அதனை உடைக்க வேண்டும். இதை 14 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். குழந்தைகளின் கல்வி, குழந்தை நலன், திருமணத்தடை, வியாபாரத் தடை, குடும்ப ஒற்றுமை நிலவும். இந்த எளிய தேங்காய் பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios