இந்த 2025ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது வருகிறது? நேரம் முக்கியத்துவம் மற்றும் பிற விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

சித்ரா பௌர்ணமி என்பது தமிழ் மாதமான சித்திரையில் ( ஏப்ரல்-மே) பௌர்ணமி நாளில் தமிழ் இந்து மத மக்களால் அனுசரிக்கப்படும் ஒரு சிறப்பு நாளாக கருதப்படுகிறது. இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை இது. இந்த மாதத்தில் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் கீழ் வருகின்றது. இது தமிழ் புத்தாண்டுக்கு பிறகு வரும் முதல் பௌர்ணமி ஆகும். 

சித்ரா பௌர்ணமி 2025 தேதி மற்றும் நேரம்:

இந்த 2025 ஆம் ஆண்டில் சித்ரா பௌர்ணமியானது மே 12ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வருகிறது. 

பௌர்ணமி திதி ஆரம்பம் : 11 மே 2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.47 மணி

பௌர்ணமி திதி முடிவடைவது : 12 மே 2025 திங்கள்கிழமை இரவு 10.45 மணி

சித்ரா பௌர்ணமியின் முக்கியத்துவம்:

மரண கடவுளான எமனால் நியமிக்கப்பட்ட வாகனக் கணக்காளர் தான் பகவான் சித்திரகுப்தர். சித்ரகுப்தர் தான் ஒவ்வொரு நபரின் கர்மாவையும், நல்லொழுக்கங்கள் மற்றும் பாவங்கள் இரண்டையும் பதிவு செய்வதாக சொல்லப்படுகிறது. புராணங்கள் படி, சித்ர் குப்தர் பார்வதி தேவியால் ஒரு தெய்வீக ஓவிய வடிவத்தில் படைக்கப்பட்டார் என்றும், பிறகு அவர் கோமாதா காமதேனு மூலம் இந்த நாளில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. 

சித்ரா பௌர்ணமி நாளில் தான் சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும். அன்று சித்தரகுப்தரை வழிபடுவது சிறப்பு மிக்கது. சித்ரா பௌர்ணமி அன்று நதிக்கரையில் அல்லது ஏரியில் சித்திரகுப்தருக்கு விரதம் இருந்து பூஜை செய்வது வழக்கம். இந்நாளில் கெட்ட கர்மாக்களை சமநிலைப்படுத்த தவறுபவர்கள், மீண்டும் பிறக்கும் நிலை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

சித்திரை திருவிழா:

மதுரையில் சித்ரா பெளர்ணமி அன்று சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்நாளின் சிறப்பமசம் என்னவென்றால், கள்ளழகர் எழுந்து தனது பக்தர்களுக்கு அருள் பொழிவதற்காக தனது அடையாளப் பயணத்தை மீண்டும் நிகழ்தும் தருணமாகும். கள்ளழகரின் இந்த தெய்வீக காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

சித்ரா பெளர்ணமி எப்படி கொண்டாட வேண்டும்?

சித்ரா பௌர்ணமி அன்று புனித நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை இது தவிர கிரக தோஷங்கள் நீங்க சித்ர குப்தரை வழிபடுங்கள். ஏழைகளுக்கு உணவு உடை தானமாக கொடுக்கலாம். நவதானியங்களை சமைத்து தெய்வங்களுக்கு படைக்கலாம். ராகு மற்றும் எமகண்டத்தில் பூஜை செய்ய கூடாது. 

சித்ரா பௌர்ணமி வழிபடுவதன் பலன்கள்:

சித்ரா பௌர்ணமி அன்று பூஜை செய்து வழிபட்டால் கர்மாக்களில் இருந்து விடுபடலாம் இது மேலும் அன்னாளில் தவறான செயல்கள் ஏதும் செய்யாமல் உண்மையாக நடக்க வேண்டும். மனதில் எதிர்மறை மற்றும் கெட்ட இனங்கள் ஏதுமில்லாமல் கடவுளை முழு மனதுடன் பிரார்த்திக்க வேண்டும்.