- Home
- Tamil Nadu News
- சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு செல்ல திட்டமா.? போக்குவரத்து துறை, ரயில்வே அசத்தல் அறிவிப்பு
சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு செல்ல திட்டமா.? போக்குவரத்து துறை, ரயில்வே அசத்தல் அறிவிப்பு
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மே 11 மற்றும் 12 தேதிகளில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
11/05/2025 இரவு 08.48 மணி முதல் 12/05/2025 இரவு 10.44 மணி வரை (திங்கள்கிழமை) சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 11/05/2025 மற்றும் 12/05/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 11/05/2025 அன்று 1,156 பேருந்துகளும் மற்றும் 12/05/2025 அன்று 966 பேருந்துகளும் சென்னை மாதவரத்திலிருந்து 11/05/2025 அன்று 150 பேருந்துகளும் 12/05/2025 அன்று 150 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும்.
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 11/05/2025 அன்று 1,940 பேருந்துகளும் 12/05/2025 அன்று 1,530 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 11/05/2025 மற்றும் 12/05/2025 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
இதே போல தெற்கு ரயில்வே சார்பாக திருவண்ணாலைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மே 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வெங்கடேஷபுரம், அய்யனூர், திருக்கோவிலூர், தண்டரை வழியாக இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.