பெருமாளை துயில் எழுப்பும் கெளசல்யா சுப்ரஜா .. எப்படி வந்தது தெரியுமா?

உலகம் முழுக்க இருக்கும்  பெருமாள் பக்தர்கள் காலை எழுந்ததும் முதலில் சுப்ரபாதம் கேட்பதையே வழ்க்கமாகி கொண்டிருக்கிறார்கள். காலை  வழிபாடாக இதன் மூலமே வேங்கடவனை அடைந்துவிடுகிறார்கள். இத்தனை சிறப்புக்களை கொண்டுள்ள  சுப்ரபாதம் வந்த புராணக்கதை தெரியுமா?
 

benefits of hearing venkateswara suprabhatam

திருமலையில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீமந் நாராயணனை அதிகாலை துயிலெழுப்ப பாடப்படும் கெளசல்யா.. சுப்ரஜா என்னும் சுப்ரபாதம் கேட்காதவர்கள் யாருமே இல்லை. திருமலை நாதனை  நாடினால் கால் பதிக்கும் இடமெல்லாம்  சுப்ரபாத ஒலியை கேட்கலாம்.  கண் மூடி இதை கேட்டால் போதும். கேட்கும்போதே பக்தர்களுக்கு ஏழுமலையானை தரிசித்த பேறு கிட்டிவிடும்.  அத்தனை அமிர்தமாய் காதுகளில் ஒலிக்கும். 

உலகம் முழுக்க இருக்கும்  பெருமாள் பக்தர்கள் காலை எழுந்ததும் முதலில் சுப்ரபாதம் கேட்பதையே வழ்க்கமாகி கொண்டிருக்கிறார்கள். காலை  வழிபாடாக இதன் மூலமே வேங்கடவனை அடைந்துவிடுகிறார்கள். இத்தனை சிறப்புக்களை கொண்டுள்ள  சுப்ரபாதம் வந்த புராணக்கதை தெரியுமா?

பிரம்மரிஷி என்றழைக்கப்படும் விஸ்வாமித்திரர் காயத்ரி மந்திரம் தவிர்த்து ரிக் வேதத்தையும் எழுதியவர் என்று சொல்லப்படுகிறது. இவர்  எப்போதும் இறைவனை நினைத்து  கடுமையான தவங்களையும் யாகங்களையும் செய்துவந்தார்.  ஒரு முறை இவர்  யாகம் செய்யும் போது அரக்கர்கள் வேள்வியை செய்யவிடாமல் இடையூறு செய்து வந்தார்களாம். இதனால் விஸ்வாமித்திரர் மனம் கலங்கி அயோத்தியை ஆண்ட தசரதனை சரணடைந்தார். அப்போது அவரது துயரை போக்க ஸ்ரீ மந் நாராயணனின் அவதாரமான இராமனும், இலட்சுமணனும் வந்தார்கள். 

விஸ்வாமித்திரருடன் நீண்ட  தூரம்  கடு மேடுகளை கடந்து நடந்து வந்தவர்கள் களைப்பை உணரவே  சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று கங்கைக்கரையில் ஓய்வெடுக்க நினைத்து அங்கேயே தங்கினார்கள். அதிகாலையில்  பிரம்ம முகூர்த்தத்தில் 4. 30 மணிக்கு வழக்கம் போன்று விஸ்வாமித்திரர் உறக்கம் கலைந்து எழுந்துவிட்டார். களைப்பு மிகுதியால் உறங்கிகொண்டிருந்த  இராமன் இலட்சுமணனுடன் நன்றாக உறங்கி கொண்டிருந்தார். அவர்களை எழுப்ப முயற்சித்தார். ஆனாலும்  உறங்கிகொண்டே இருந்தார்கள். 

சரி நாம் போய் நீராடுவோம் என்று விஸ்வாமித்திரர் கங்கைக்கரையில் நீராடி முடித்து வந்தார். ஆனால் அப்போது  இராமன் எழுந்திருக்கவில்லை. நேரம் கடந்து சென்றது. மணி 6. 30 ஆனது. எனினும் இராமன் எந்திரிக்காமல் தூங்கி கொண்டே இருக்கவே விஸ்வாமித்திரருக்கு கோபத்துக்கு மாறாக  மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. இராமனின் கண்கள்  இன்பமாக துயில் கொள்வதை கவனித்து  அவர்களை அதே மகிழ்வோடு எழுப்பவே கெளசல்யா சுப்ரஜா என்னும் பாடலை பாடினாராம். 

ஆயுதபூஜை வந்த கதையும் வழிபடும் முறையும்!

தெய்வ அவதாரத்துடன் இருந்து அத்தகைய தெய்வத்தை எழுப்பும் பாக்கியம்  ஒருநாளேனும்  தமக்கு கிடைத்திருப்பதை எண்ணி ஆனந்தம் கொண்டார். அதே நேரம் இவர்களை தினமும் மகிழ்ச்சியாக   எழுப்பகூடிய  பாடலாகவே   இப்பாடலை தொடங்கினார்.  தெய்வ குழந்தையை பெறும் பேறை பெற்ற இராமனின் தாயான கெளசல்யாவை நினைத்து கெளசல்யா  சுப்ரஜா என்னும் சுப்ரபாதத்தை பாடி எழுப்ப தொடங்கினார். 

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே!
உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!

பக்தனின் கனவில் காலணி கேட்கும் தான் தோன்றி மலை பெருமாள்!

கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே!
எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை!

இந்த சுப்ரபாதம் தான் திருப்பதியில் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின்  குரலில் ஸ்ரீமந் நாராயணனின் திருப்பள்ளியெழுச்சி பாடலாய் திருமலை மேலும் கீழ் திருப்பதியிலும்  ஒலிக்கிறது.  பக்தர்களை மேலும் பரவசமாக்குகிறது. 

மகாவிஷ்ணுவின் அவதாரம் இராமன் என்றால் விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷன் இலக்குவன். இலக்குவனை எழுப்ப வேண்டியதில்லை. இராமன் எழுந்தால் இலட்சுமணனும் எழுந்துதான் ஆகவேண்டும். 

இனி உங்கள் இல்லங்களிலும் அதிகாலை  சுப்ரபாதம் ஒலிக்கட்டும். ஸ்ரீ மந் நாராயணனின் அருள் பார்வை கிட்டட்டும். சகல செளபாக்கியங்களையும் குறையில்லாமல் தருவான் வேங்கடமுடையான். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios