Pradosham : சுக்ர திசையில் பயணிப்பவர்கள் நாளை பிரதோஷத்தை தவற விட வேண்டாம்!
பிரதோஷம். வெள்ளி பிரதோஷம். வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையை தரிசிப்போம். சுக்கிர யோகம் கிடைக்கப்பெறுவோம் என்பது ஐதிகம்.
மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது. அமாவாசைக்கு மூன்றாம் நாளில் வளர்பிறை திரயோதசி திதி மற்றும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளில் வரும் தேய்பிறையில் வரும் நாள் பிரதோஷ காலம் ஆகும். இந்த நாளில் மாலை 4.20 மணி முதல் 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷம் காலம் ஆகும். இந்த நாளில் விரதமிருந்து மாலை வேளையில் நந்திக்கு செய்யும் அபிஷேகத்துக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
ஆரம்பத்தில் சித்தர்கள் மட்டும் வழிபாடு செய்து வந்த நிலையில் ஆன்மிக பிரியர்களும் அவர்களை தொடர்ந்து தற்போது பிரதோஷத்தின் அருமையும், பெருமையும் அறிந்து மக்களும் பிரதோஷ வழிபாட்டை செய்தார்கள்.
பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தரிசித்தால் சர்வ பாவமும் விலகி நன்மை உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரதோஷம் வரும் நாளை பொறுத்து அதற்கான பலன்களும் விசேஷமானது. எனினும் பிரதோஷத்தை தவறவிடாமல் சிவாலயம் செல்வது சிவ தரிசனம் செய்வது மகா புண்ணியம் என்கிறது ஞான நூல்கள்.
வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் விசேஷமானது. நாளை வெள்ளிக்கிழமை பிரதோஷம். சுக்ர திசை நடப்பவர்கள் சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்து கொள்ள வேண்டும். சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்துக்கு சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். இதனால் உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திதி பார்ப்பது நல்லதா, கெட்டதா?
வாழ்க்கையில் கடன் பிரச்சனைகள் தீரவும், பொருளாதார சிக்கல்கள் நீங்கவும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில் விரதமிருந்து பிரதோஷ வேளையில் சிவனுக்கும் நந்திக்கும் நடக்கும் அபிஷேக ஆராதனைகளை கண்டு களிக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள் கூறுகிறார்கள் .
நாளை வெள்ளிக்கிழமை பிரதோஷம். அபிஷேகப்பிரியரான சிவபெருமானை குளிர செய்யும் பூஜையையும், நந்திதேவருக்கு செய்யும் 16 விதமான அபிஷேகங்களையும் கண்டு களியுங்கள். உங்களால் இயன்ற அபிஷேக பொருள்களை வாங்கி கொடுங்கள். உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.