Asianet News TamilAsianet News Tamil

கணவன் மனைவி உறவுகளில் இருக்கும் பிரச்சனையை முடித்து வைக்கும் ஒரு கோயில்... எங்க இருக்கு தெரியுமா..?

கணவன் மனைவி பிரச்சனை தீவிரமாகி விவாகரத்துக்கு தாக்க செய்வதவர்கள் கூட, இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் பெற்றால் விரைவில் முடிவு கிடைக்கும். 

 

bandi mata mandir lucknow
Author
First Published Jun 5, 2023, 11:26 AM IST

இந்து சமயங்களில் எல்லா விஷயங்களுக்கும் கோயிலுக்கு செல்வார்கள். குழந்தை பிறந்ததும் காது குத்துவது தொடங்கி அறுபதாம் கல்யாணம் வரை அனைத்து முக்கிய தருணத்திலும் கோயிலுக்கு செல்வார்கள். விரத நாள்களில் தவறாமல் பூஜை செய்வது அவர்களின் மரபாகிவிட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு பிரச்சனைக்கு தீர்வை கொடுக்கும். அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒரு கோயில் வினோதமான தீர்வை கொடுக்கிறது. கசப்பான உறவுகளால் துன்பப்படுபவர்கள் அதை விட்டு வெளியேற இந்தக் கோயில் உதவுகிறது. 

என்னது? விவாகரத்து வாங்கி தர ஒரு கோயிலா என தோன்றுகிறதா? உண்மைதான். விவகாரத்து தாக்கல் செய்பவர்களுக்கு விரைந்து விவாகரத்து கிடைக்க இந்தக் கோயில் உதவுகிறது. லக்னோவில் அமைந்துள்ள சௌபதியா சௌராஹாவிற்கு பக்கத்தில் உள்ள பண்டி மாதா கோயில் தான் பக்தர்களின் விவாகரத்து வழக்குகளை முடிக்க உதவுகிறது. 

கோயில் திறப்பு விவரம்: 

இந்த கோயிலுக்கு அர்ச்சகர் என எவரும் கிடையாது. ஒரு குடும்பம் தான் கோயிலை பராமரித்து வருகிறதாம். ஏதோ இப்போதுதான் இந்த கோவில் தொடங்கியுள்ளார்கள் என நினைக்க வேண்டாம். பல ஆண்டுகளாக இந்தக் கோயில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. இங்கு சென்று தரினசம் செய்ய காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதி உண்டு. அதன் பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் மீண்டும் திறக்கப்படுமாம். 

கோயிலின் சிறப்பு: 

இங்கு சென்று தரிசனம் செய்யும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுடைய திருமண உறவுக்காக வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தை முறித்து கொள்ள நினைப்பவர்கள் தான் பெரும்பாலும் இங்கு செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்னர் இக்கோயிலில் இருக்கும் அம்மனுக்கு வெள்ளிக் கொலுசு வாங்கி காணிக்கையாக வைக்கிறார்கள். மேலும் அம்மனுக்கு இனிப்பு, தேங்காய், பிற மங்கள பொருட்களும் காணிக்கையாக வழங்கப்படுகின்றன. 

இதையும் படிங்க: வீட்டு தலைவாசலில் சங்கு பதித்தால் இத்தனை சிறப்பு பலன்களை பெறலாமா? இது தெரியாம வீடு கட்டாதீங்க!!

இந்தக் கோயிலை குறித்து கோயில் பராமரிப்பாளர் கூறும்போது, பண்டி மாதா கோயில் பாஜ்பாய் குல்தேவி எனவும் வாஞ்சையாக அழைக்கப்படுகிறது. இந்த அம்மன் மனக்கசப்பை அளிக்கும் உறவுகளிலிருந்து பக்தர்களை விடுவிப்பார் என்பது ஐதீகம். இப்படி பக்தர்களின் நிம்மதியான வாழ்வுக்கு தேவி உதவி புரிவதாக நம்பப்படுகிறது. 

கோயின் பழமை: 

இந்த கோயிலின் வரலாறு குறித்து யாருக்கும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் இந்த கோயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். அம்மனின் திருவருள் பெற்று திரும்புகின்றனர்.  

இதையும் படிங்க: புரிதல் இல்லாத கணவன் மனைவி பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரங்கள்!!

Follow Us:
Download App:
  • android
  • ios