வீட்டு தலைவாசலில் சங்கு பதித்தால் இத்தனை சிறப்பு பலன்களை பெறலாமா? இது தெரியாம வீடு கட்டாதீங்க!!

vastu tips in tamil: வீட்டின் வாசலில் சங்கு பதிப்பதால் என்னென்ன நன்மைகள் விளைகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Vastu tips for keeping Sangu in home

மகாவிஷ்ணு மும்மூர்த்திகளிலும் காக்கும் கடவுளாக திகழ்கிறார். அவருடைய அம்சம் தான் வலம்புரிச் சங்கு. வீட்டில் வலம்புரி சங்கை வாங்கி வைத்தாலே செல்வம் சேரும் என்பார்கள். இந்த வலம்புரி சங்கு ஐஸ்வர்ய லட்சுமியின் அம்சமாகவும் நம்பப்படுகிறது. 

வீட்டின் தலைவாசலில் சங்கு பதிக்கலாமா? 

நம்முடைய முன்னோர் வீட்டை கட்டும்போது அதனுடைய தலைவாசலில் சங்கு பதிப்பதை பாரம்பரியமாக வைத்திருந்தனர். மரபாக அதை பின்பற்றாமல் போனதால் இந்த தலைமுறை வீட்டு வாசலில் சங்கு பதிப்பதையே மறந்துவிட்டனர். அவர்களுக்கு அதற்கான காரணமும் தெரியாது. 

என்னென்ன பலன்கள்!? 

மகாவிஷ்ணுவின் அம்சமான சங்கை வீட்டின் தலை வாசலில் பதிப்பதால் வீட்டில் தெய்வ சக்தி நிலை கொள்ளும். வீட்டு பூஜை அறையிலும் வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்யலாம். 

நம்முடைய வீட்டின் தலை வாசலில் சங்கு பதித்தால் வீட்டிற்குள் கெட்ட சக்திகள் வராது என்பது ஐதீகம். வீட்டின் மீது எவருடைய கண் திருஷ்டியும் படாது. எந்த வீட்டின் தலைவாசலில் சங்கு பதித்திருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி தொடர்பான எந்த பாதிப்புகளும் ஏற்படாது. 

இதையும் படிங்க: Vastu Tips: வீட்டுல செல்வம் குவியணுமா? வாழை மரம் இப்படி வச்சு பாருங்க!! உங்களுக்கான வாஸ்து டிப்ஸ்!!

வீட்டில் வலம்புரி சங்கிற்கு பூஜை செய்தால் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சங்கு பூஜை செய்யலாம். இதற்கு ஒரு வாழை இலையில் அரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மீது சங்கை வைத்து சந்தனம், குங்குமம், பூக்கள் ஆகியவை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பின்னர் நம் வீட்டிற்குள் லட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்பதை பிரார்த்தனை செய்து, லட்சுமிக்கான போற்றி பாடலை பாராயணம் செய்யலாம். லட்சுமி அஷ்டோத்திரமும் சொல்லலாம். இதனால் உங்கள் வீட்டிலுள்ள திருஷ்டி தோஷங்கள் விலகும். செல்வ செழிப்பு பெருகும். 

இதையும் படிங்க: இந்த 5 பொருள்ல ஒன்னு உங்க வீட்ல இருந்தாலும் வற்றாத பணம் இருக்கும்ங்கிறது ஐதீகம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios