Vastu Tips: வீட்டுல செல்வம் குவியணுமா? வாழை மரம் இப்படி வச்சு பாருங்க!! உங்களுக்கான வாஸ்து டிப்ஸ்!!
Banana Tree vastu tips in tamil: வீட்டில் வாழைமரம் வைத்திருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பயனுள்ள வாஸ்து குறிப்புகள்...
வாழைமரம் சுபகாரியங்களின் மங்களகரமான அடையாளம். வாழைமரங்களுக்கு இந்து சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரங்களில் தனித்த இடமுள்ளது. வாழ்த்தும்போது கூட வாழையை மனதில் வைத்து அப்படி செழித்து வாழ வேண்டும் என்று தான் வாழையடி வாழையாக குடும்பம் சிறக்க வாழ்த்துவார்கள். ஆன்மீக ரீதியாக பல நன்மைகளை கொண்டுள்ள வாழை மரத்தை வீட்டில் வளர்க்கும் போது சில வாஸ்து குறிப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியுள்ளது. அதை பின்பற்றினால் தான் வீட்டில் செல்வமும் நிம்மதியும் பெருகிக்கொண்டே இருக்கும்.
வாழை வைக்க வேண்டிய திசை:
வாஸ்து குறிப்புகளின்படி, உங்கள் வீட்டில் வைக்கும் வாழை மரத்தை வடகிழக்கு திசையில் வையுங்கள். தென்கிழக்கு, தெற்கு அல்லது மேற்கு ஆகிய திசையில் வைக்கவேகூடாது. வடக்கு திசையை ஆளுபவர் வியாழன் பகவான் ஆவார். மகாவிஷ்ணு பனைமரத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. வீட்டின் பிரதான வாசலில் வாழைமரம் மறைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் இதனால் வீட்டிற்குள் மங்கள சக்திகள் வருவது தடுக்கப்படும் என ஜோதிடம் சொல்கிறது.
மகாவிஷ்ணு ஆசீர்வாதம்:
வாழைமரம் வைத்துள்ள இடத்தை எப்போதுமே தூய்மையாக வைத்திருக்கிற வேண்டும். இந்த மரமே வியாழன் கிரகம், விஷ்ணு ஆசியில் வளர்வதால் ஐதீகம். வாழை வழிபாட்டுக்கும் சில முறைகளும், விதிகளும் இருக்கின்றன. ஒவ்வொரு வியாழன் கிழமையும் காலையில் எழுந்து நீராடி மஞ்சள் வஸ்திரம் உடுத்தி வாழை மரத்தை வணங்குங்கள். வாழைமரத்தின் முன்பு நெய் தீபம் ஏற்றி வாழை மரத்தை ஒன்பது முறை சுற்றி வாருங்கள். குரு பகவானின் மந்திரங்களை பாராயணம் செய்யுங்கள். வீட்டில் வாழை மரம் இருந்தால் குரு தோஷம் நீங்கிவிடும். திருமணத்தில் இருக்கும் தடைகளை நீக்கிவிடும்.
வாழை மரம் மகாவிஷ்ணு, மகாலட்சுமி, குரு பகவானுடன் தொடர்புடையதாக நம்பப்படுவதால், வாழை மரத்தை முறையாக பராமரிக்கவில்லை எனில், அது குடும்பத்திற்கு அசுபமாகவும், நஷ்டமாகவும் கருதப்படுகிறது என்கிறது ஜோதிடம். வாழைமரத்துக்கு அசுத்தமான நீரை ஊற்றக் கூடாது. செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாழை மரத்தை வெட்டக்கூடாது. அதை போல பௌர்ணமி அமாவாசை நாட்களிலும் வாழை மரங்களை மறந்தும் வெட்ட கூடாது. வாஸ்து சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள விதிகளை கடைபிடித்து வீட்டில் வாழை மரத்தை வளர்த்தால் குடும்பத்தில் நிம்மதியும், அமைதியும், செழிப்பும் இருக்கும்.
இதையும் படிங்க: தெரியாம கூட இந்த 4 பொருட்கள கீழ போட வேண்டாம்.. மீறினா வீட்டுல கெட்டது நடக்கலாம்!!