ஆவணி மாதம் 2024 : முக்கிய விரதங்கள், பண்டிகை நாட்கள் குறித்த முழுவிவரம் இதோ!
Avani Month 2024 : இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் என்னென்ன நாட்களில், என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பதை பற்றி இங்கு நாம் விரிவாக பார்க்கலாம்.
ஆவணி மாதம் தமிழ் மாதத்தின் ஐந்தாவது மாதம் ஆகும். சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலம் இந்த ஆவணி மாதத்தில் தான். அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி மாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி செப்டம்பர் 16ஆம் தேதி திங்கள்கிழமை வரை உள்ளது. இந்த ஆண்டு ஆவணி மாதம் விரதம் பற்றி விசேஷங்கள் நிறைந்த மாதமாக அமைகிறது. எனவே, இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் என்னென்ன நாட்களில், என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பதை பற்றி இங்கு நாம் விரிவாக பார்க்கலாம்.
2024 ஆவணி மாதம் முக்கிய விசேஷங்கள்:
- 19 ஆகஸ்ட் (ஆவணி 3) திங்கள்கிழமை - ஆவணி அவிட்டம்
- 20 ஆகஸ்ட் (ஆவணி 4) செவ்வாய்க்கிழமை - காயத்ரி ஜெபம்
- 22 ஆகஸ்ட் (ஆவணி 6) வியாழக்கிழமை - மகா சங்கடஹர சதுர்த்தி
- 26 ஆகஸ்ட் (ஆவணி 10) திங்கள்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி
- 27 ஆகஸ்ட் (ஆவணி 11) செவ்வாய்க்கிழமை - பஞ்ச ராத்திர ஜெயந்தி
- 7 செப்டம்பர் (ஆவணி 22) சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி
- 15 செப்டம்பர் (ஆவணி 30) ஞாயிற்றுக்கிழமை - ஓணம் பண்டிகை
- 16 செப்டம்பர் (ஆவணி 31) திங்கள்கிழமை - மிலாடி நபி
இதையும் படிங்க: ஆவணி அவிட்டம் 2024 எப்போது? அதன் முக்கியத்துவமும், சடங்கு முறைகளும் இதோ!
2024 ஆவணி மாதம் முக்கிய விரத நாட்கள்:
- 2 செப்டம்பர் (ஆவணி 17) திங்கட்கிழமை -அமாவாசை
- 19 ஆகஸ்ட் (ஆவணி 3) திங்கள்கிழமை - பௌர்ணமி
- 26 ஆகஸ்ட் (ஆவணி 10) திங்கள்கிழமை - கிருத்திகை
- 18 ஆகஸ்ட் (ஆவணி 2) ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் (ஆவணி 29) சனிக்கிழமை - திருவோணம்
- 29 ஆகஸ்ட் (ஆவணி 13) வியாழக்கிழமை, 14 செப்டம்பர் (ஆவணி 29) சனிக்கிழமை - ஏக தாசி
- 25 ஆகஸ்ட் (ஆவணி 9) ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் (ஆவணி 24) திங்கள் கிழமை - சஷ்டி
- 22 ஆகஸ்ட் (ஆவணி 6) வியாழக்கிழமை - சங்கடஹர சதுர்த்தி
- 1 செப்டம்பர் (ஆவணி 16) ஞாயிற்றுக்கிழமை - சிவராத்திரி
- 17 ஆகஸ்ட் (ஆவணி 1) சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் (ஆவணி 15) சனிக்கிழமை - பிரதோஷம்
- 7 செப்டம்பர் (ஆவணி 22) சனிக்கிழமை - சதுர்த்தி
இதையும் படிங்க: இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? அதிஷ்டத்தை அள்ளி கொடுக்குமா?
2024 ஆவணி மாதம் சுப முகூர்த்த நாட்கள்:
- 22 ஆகஸ்ட் (ஆவணி 6) - தேய்பிறை முகூர்த்தம் (வியாழன்)
- 23 ஆகஸ்ட் (ஆவணி 7) - தேய்பிறை முகூர்த்தம் (வெள்ளி)
- 30 ஆகஸ்ட் (ஆவணி 14) - தேய்பிறை முகூர்த்தம் (வெள்ளி)
- 5 செப்டம்பர் (ஆவணி 20) - வளர்பிறை முகூர்த்தம் (வியாழன்)
- 6 செப்டம்பர் (ஆவணி 21) - வளர்பிறை முகூர்த்தம் (வெள்ளி)
- 8 செப்டம்பர் (ஆவணி 23) - வளர்பிறை முகூர்த்தம் (ஞாயிறு)
- 15 செப்டம்பர் (ஆவணி 30) - வளர்பிறை முகூர்த்தம் (ஞாயிறு)
- 16 செப்டம்பர் (ஆவணி 31) - வளர்பிறை முகூர்த்தம் (திங்கள்)
2024 ஆவணி மாதம் அஷ்டமி நவமி கரி நாட்கள்:
அஷ்டமி -26 ஆகஸ்ட் (ஆவணி 10) திங்கள் கிழமை, 11 செப்டம்பர் (ஆவணி 25) புதன்கிழமை
நவமி - 27 ஆகஸ்ட் (ஆவணி 11) செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் (ஆவணி 27) வியாழக்கிழமை
கரி நாட்கள் - 18 ஆகஸ்ட் (ஆவணி 2) ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் (ஆவணி 9) ஞாயிற்றுக்கிழமை, 13 செப்டம்பர் (ஆவணி 28) வெள்ளிக்கிழமை.