இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? அதிஷ்டத்தை அள்ளி கொடுக்குமா?
சில உயிரினங்கள் நம் வீட்டிற்கு வந்தால் நல்ல சகுனமாகவும், சில உயிரினங்கள் வீட்டிற்குள் வந்தால் கெட்ட சகுனமாகவும் கருதப்படுகிறது. குருவி, பறவைகள் போன்ற சில உயிரினங்கள் வீட்டிற்குள் வருவது நல்ல சகுனமா கெட்ட சகுனமா என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
Crow
உலகில் அனைத்து உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டது என்றாலும் கூட ஒவ்வொரு உயிரினத்திற்கு ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். நம் வசிக்கும் வீட்டில் குருவி, பறவைகள் என பல உயிரினங்கள் அவ்வப்போது வரக்கூடும். இதில் சில உயிரினங்கள் நம் வீட்டிற்கு வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? என்பதை பார்ப்போம்.
காகம்
காகம் முக்கியமான பறவைகளில் ஒன்று. இது சனீஸ்வர பகவானின் வாகனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அமாவாசை தினங்களில் காகத்திற்கு சாப்பாடு வைத்த பிறகே, அனைவரும் சாப்பிட வேண்டும். நாம் தினமும் வைத்தால் நாம் அறியாமல் செய்த பாவங்கள்கூட நம்மை விட்டு நீங்கி விடுமாம். காகத்திற்கு வீட்டிற்கு வெளியே, மொட்டை மாடி, பால்கனியில் சாப்பாடு வைக்கலாம். ஆனால் காகம் வீட்டிற்குள் வந்தால் நல்லது இல்லை என்று கூறுகிறார்கள்.
Bat
வவ்வால்:
இந்து மத சாஸ்திரப்படி வவ்வால்கள் வீட்டிற்குள் வரவே கூடாது. அபச குணம் என்பார்கள். மேலும் வீட்டில் பண பிரச்சனைகள் ஏற்படுமாம். ரத்த காயத்தோடு வவ்வால் வீட்டில் வந்து விழுகிறது என்றால் அது நடக்கு ஏதோ ஒடு கெடுதல் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
Eagle
கழுகு:
வீட்டிற்குள் கருடன் வந்தால் நல்லது. ஆனால் கழு வரக்கூடாது. பொதுவாக கழுகுகள் உயர பறக்ககூடியவை. பெரும்பாலும் வீட்டிற்குள் வராது என்றாலும், சில கிராம புறங்களில் பல வீடுகளில் கழுகு நுழையும். இது இந்து மத நம்பிக்கைப்படி நல்லது இல்லை. கழுகு வீட்டிற்குள் நுழையும் போது பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு பரஸ்பர அன்பு முடிவுக்கு வருவதாக கருதப்படுகிறது.
Sparrow
சிட்டுக்குருவி :
வீட்டுக்குள் சிட்டுக்குருவி வந்தால் அதனை விரட்ட வேண்டாம். ஏனெனில் எப்போதுமே வீட்டிற்குள் சிட்டுக்குருவி வராது. அரிதாக சிட்டுக்குருவி வீட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. அப்படி சிட்டுக்குருவி உங்கள் வீட்டிற்குள் வந்தால் அதை விரட்ட வேண்டம். அது அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நல்ல சகுனமாக கருதப்படுகிறது. சிட்டுக்குருவி துழையும் வீட்டினுள் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
bad
ஆந்தை:
ஆந்தையின் தோற்றம் காரணமாக பலருக்கும் அதனை பிடிப்பதில்லை. ஆனால் ஆந்தை என்பது மகாலட்சுமியின் வாகனமாகும். வட மாநிலங்களில் அதிர்ஷ்ட லட்சுமி ஆந்தையை தான் தனது வாகனமாக கொண்டுள்ளார். எனவே ஆந்தை வீட்டிற்குள் வரவில்லை என்றாலும் பால்கேனியிலோ அல்லது வீட்டிற்குள்ளே வந்துவிட்டால் நல்லது இல்லை. வீட்டில் வம்ச விருத்தியில் பிரச்சனை ஏற்படலாம்.
Dove
புறா:
வீட்டிற்கு வருவதால் செல்வ வளம் மேலும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். எனவே புறாக்களுக்க்கு தானியம் போடுவது தண்ணீர் வைப்பது, போன்றவற்றால் நமக்கு புண்ணியம் கிடைக்கும். புறா மகா லட்சுமியின் உருவமாக கருதப்படுகின்றது. புறா வீட்டிற்குள் வந்தாலோ அல்லது கூடு கட்டினாலோ வீட்ல் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. அதேபோல் பொன்வண்டு, குளவி, கிளி போன்றவை வீட்டிற்குள் வந்தால் அது நல்ல சகுனமாகவே கருதப்படுகிறது.