Aadi Sevvai : ஆடி செவ்வாயில் முருகன் அம்மனை வழிபட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
இன்று ஆடி செவ்வாய் என்பதால் இந்நாளில் அம்மன் மற்றும் முருகனை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆடி பிறப்பு என்பது ஆடி மாதத்தின் முதல் நாள் ஆகும். இந்த மாதத்தில் தான் திதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடி பிறப்பு, ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, ஆடி தபசு, ஆடி பூரம் என ஆடி மாதம் முழுவதும் வரும் சிறப்பு நாட்களாகும்.
அதன் படி இன்று ஆடிச்செவ்வாய் என்பதால், இந்நாளில் விரதம் இருந்தால், அம்மன், முருகனுக்கு உரிய நாளாகும். குறிப்பாக பெண்கள் இந்நாளில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் உங்கள் வீட்டில் சுபிட்சம் உண்டாகும். மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும். அதுபோல் நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமென்றால், அம்மன், முருகனுக்கு செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுசு நீடிக்க இந்நாளில் ஒளவையார் விரதம் இருக்க வேண்டும். குறிப்பாக அம்மன் மற்றும் முருகனை இந்நாளில் வழிபட்டால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும், உங்கள் கடன்கள் அனைத்தும் தீரும்.
இதையும் படிங்க: Aadi Sevvai 2023: ஆடி செவ்வாய் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க!!