Asianet News TamilAsianet News Tamil

Aadi Sevvai 2023: ஆடி செவ்வாய் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க!!

ஆடி செவ்வாய் விரதம் இருப்பது பென்களுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக அந்நாளில் அம்மனை வழிப்பட்டால் பலவித நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே ஆடி செவ்வாய் வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

benefits and procedure of aadi sevvai viratham 2023
Author
First Published Jul 17, 2023, 5:10 PM IST

ஆடி மாதம் இன்றிலிருந்து ஆரம்பமாகிவிட்டது. ஆடி மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மற்றும் ஆடி ஞாயிறு ஆகிய நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன் படி, தொகுப்பில் நாம் ஆடி செவ்வாய் முக்கியத்துவம் மற்றும் விரதம் குறித்து இங்கு பார்க்கலாம்.

ஆடி செய்வாய் இறைவழிப்பாடு:
ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். பின்னர் பூஜையறையை தண்ணிரைக் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின் பூஜையறையிலுள்ள அனைத்து விக்கிரகப் படங்களையும் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். மேலும் பழங்கள் மற்றும் பாலை நிவேதனமாக கொடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆடி செவ்வாய் அன்று வீட்டின் பூஜை அறையில் 2 குத்து விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். 

இதையும் படிங்க: Aadi Matham Festival 2023: ஆடி மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள் என்ன? எந்த நாட்களில் வருகிறது தெரியுமா?

ஆடி செவ்வாயில் உங்கள் குல தெய்வத்தை வழிபட வேண்டும். குறிப்பாக அன்றைய தினம் முழுதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து குல தெய்வத்தை  வணங்கினால் இறைவனின் ஆசி கிடைக்கும். குறிப்பாக நீங்கள் முழு மனதுடன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆடி செவ்வாய் அன்றும் மாலையில் அம்மனுக்கு தீபம் ஏற்றி நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி போன்றவை படைக்க வேண்டும். பூஜை முடிந்த பின் அந்த பிரசாதத்தை எடுத்து உங்கள் உண்ணாவிரதத்தை முடிக்கவும்.

ஆடி செவ்வாய் விரதத்தின் பலன்கள்:
ஒவ்வொரு ஆடி செவ்வாய் அன்றும் பெண்கள் விரதம் இருந்து இறைவனை வழிப்பட்டு வந்தால், வீடு சுபிட்சம் அடையும். மேலும் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் அத்தனை தோஷங்களும், கஷ்டங்களும் நீங்கும். 
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம் என போன்ற எந்த விதமான தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.  அதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாதவர் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios