Asianet News TamilAsianet News Tamil

நாளை ஆடி மாதத்தின் முதல் வெள்ளி.. செல்வம் செழிக்க இந்த இரண்டு பொருளை கட்டாயம் வாங்குங்கள்!

ஆடி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு மிகவும் உரித்தான ஒரு நாள்.

Aadi month first Friday a very special day buy these 2 things in your home
Author
First Published Jul 20, 2023, 9:07 PM IST

கடந்த ஆங்கில மாதம் ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் இனிதே துவங்கியது. ஆடி மாதம் என்றாலே வீட்டிலும் சரி ஆலயங்களிலும் சரி பெரிய அளவில் வழிபாடுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். இது மிகவும் விசேஷமான ஒரு மாதம் என்றும் கூறலாம். அப்படியான இந்த விசேஷமான நாளில் இரண்டு முக்கியமான பொருட்களை உங்கள் வீட்டில் புதிதாக வாங்கி வைக்கும் பொழுது ஐஸ்வரியம் இன்னும் பெரிய அளவில் கூடும் என்பது ஐதீகம். 

ஆடி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு மிகவும் உரித்தான ஒரு நாள். அந்த நாளில் அந்த தெய்வத்திற்கு உகந்த ஒரு பொருளை நீங்கள் வீட்டில் வாங்கி வைத்தால் உங்கள் வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும், பிணிகள் நீங்கி புத்துயிர் பிறக்கும் என்பார்கள். 

தங்க நகைகள் அதிகம் சேர வேண்டுமா? இதை ஒரு சொட்டு தடவி விட்டால் போதுமாம்! கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம்.!

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு பகவானுக்கு அருகில் உள்ளவர்தான் மகாலட்சுமி, இந்நிலையில் அவருக்கு உப்பு மிகவும் பிடிக்கும் என்று கூறுவார்கள். அதனால் நாளை ஆடி முதல் வெள்ளி என்று உங்கள் வீட்டில் சிறிது உப்பை வாங்கி வைக்க பல ஐஸ்வரியங்கள் ஒன்றாக கூடும். 

அதேபோல சீனி அல்லது கற்கண்டுகளையும் நாளை உங்கள் வீட்டில் புதிதாக வாங்கி வைக்கலாம். நவநாகரீகம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் பொதுவாக உப்பை கண்ணாடி பெட்டியில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் அடைப்பது தான் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் நம் மரபுகளையும், கடவுளையும் வணங்கும் விதமாக பீங்கான் அல்லது மண்பாண்டங்களில் உப்பை சேமித்து வைத்து உபயோகப்படுத்தினால் அது உடலுக்கும் நன்மை பயக்கும்.

Aadi Perukku 2023: ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுவது ஏன்? அதன் சிறப்புகள் என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Follow Us:
Download App:
  • android
  • ios