திருப்பதியில் லட்டு வாங்க இன்று முதல் ஐடி கட்டாயம்; தேவஸ்தானம் அறிவிப்பு
சாமி கும்பிடாமல் லட்டு மட்டும் கேட்கும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் ஒரு ஆதாருக்கு கூடுதலாக இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் லட்டு விநியோக நடைமுறையில் சிறிய மாற்றத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது என்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்துள்ளார். அதன்படி, லட்டுக்களை வாங்கி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் அடிப்படையில் சாமி கும்பிட்ட பின் டிக்கெட்டுகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு லட்டு தயாரிப்பு,
ரயில்வே துறையில் 7951 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி; மிஸ் பண்ணீறாதீங்க
அன்றைய நாளில் அதற்கு உள்ள தேவை ஆகியவற்றின் அடிப்படையில் லட்டு விற்பனை செய்யப்படும். ஆனால் சாமி கும்பிடாமல் லட்டு மட்டுமே தேவை என்று வருபவர்கள் அவர்களுடைய ஆதார் அட்டையை கவுண்டர்களில் சமர்ப்பித்து இரண்டு லட்டுக்களை மட்டும் வாங்கிச் செல்லலாம் என்று கூறினார்.
இதன் மூலம் கவுண்டர்களில் லட்டுக்களை மட்டும் வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்யும் நபர்களில் ஆதார் எண்கள் அடிக்கடி பதிவாகும் நிலையில் அவர்களை பொறிவைத்து பிடிக்கவும், லட்டு கள்ளச்சந்தை வியாபாரத்தை ஒழித்து கட்டவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றும் அப்போது குறிப்பிட்டார்.