Asianet News TamilAsianet News Tamil

பாவத்தை போக்கும் அழுதா நதி – சபரிமலை தர்மசாஸ்தா தரிசனம்

sabarimala special-TVGQMK
Author
First Published Dec 18, 2016, 9:19 AM IST


காளைகட்டியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது அழுதாநதிக் கரை. மணிகண்டன் மகிஷியுடன் போர் புரிந்த போது, அவர் எய்த அம்பு மகிஷிமேல் பட்டதும் அவளது தீய குணம் மாறி நல்ல எண்ணம் வந்தது. அதனால் தன்னை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு, ஐயப்பனின் காலில் விழுந்து அழுதாள். அந்தக் கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருகி ஓடுவதாக புராணம் கூறுகிறது.

sabarimala special-TVGQMK

அதனால் அழுதா நதியில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம்.

பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது. மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த இடத்தில் கல்லைப் போடும் பக்தர்கள், தங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்றுவேண்டிக்கொள்கிறன்றனர்.

sabarimala special-TVGQMK

புதைந்து கிடக்கும் பாவச்சின்னம் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதால், கல்லைப் போட்டு எழவிடாமல் செய்வதாக கூறப்படுகிறது. இங்குள்ள தலத்தில், பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஐயப்பனின் விக்கிரகங்கள் இன்னும் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios