BOAT movie Review : சூரியை போல் ஹீரோவாக ஜெயித்தாரா யோகிபாபு? போட் பட விமர்சனம் இதோ
சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள போட் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நகைச்சுவை வேடங்கள் மட்டுமல்லாது, அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இதுவரை யோகிபாபு ஹீரோவாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள மற்றொரு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.
அப்படத்தின் பெயர் போட். இதை இம்சை அரசன் 23ம் புலிகேசி, புலி போன்ற படங்களை இயக்கிய சிம்புதேவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷான் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்திய சுதந்திரம் வாங்கும் முன் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து போட் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் சிம்புதேவன். இப்படத்தில் போட்மேனாக யோகிபாபு நடித்திருக்கிறார். போட் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
போட் திரைப்படத்தின் கான்செப்ட் சுவாரஸ்யமாக இருந்தாலும் இயக்குனர் சிம்புதேவன் அதை மெதுவாகவும் மந்தமாகவும் சொல்லி இருக்கிறாராம். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'தி ஓல்ட் மேன் அண்ட் தி சீ’ திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு, 1943 ஆம் ஆண்டு மெட்ராஸ் பின்னணியில் எடுக்கப்பட்டு உள்ளது. ஜப்பானியர்களின் குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க 10 பலதரப்பட்ட மனிதர்கள் படகில் ஏறி தப்பிக்க முயலும் போது கடலில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது என்பது தான் இப்படத்தின் கதை.
80 ஆண்டுகளுக்குப் பிறகும் மதம், ஜாதி, உணவு, மொழி என்று பிரிந்து கிடக்கும் நம் நாட்டில், பெரிதாக எதுவும் மாறவில்லை என்பதை அரசியல் நையாண்டியோடு உணர்த்தும் படம் தான் போட். யோகிபாபு குமரனாக அற்புதமாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷான், லீலா ஆகியோரும் சரியான தேர்வு. போட் வித்தியாசமான படமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... 'போட்' படம் எப்படி இருக்கு... சிறப்பு காட்சியை பார்த்து விட்டு அறிக்கை மூலம் விமர்சனம் கூறிய சீமான்!