எம்.சரவணன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் திரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள படம் ராங்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் திரிஷா. சத்யா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.

ஹீரோக்களுக்கு இணையாக மிகப்பெரிய அளவில் கட் அவுட் எல்லாம் வைத்து திரிஷா படத்திற்கு காலை 7 மணி சிறப்புக்காட்சியும் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து ராங்கி படம் பார்த்தார் திரிஷா. கடைசியாக திரிஷா நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், ராங்கி படம் பார்த்த ரசிகர்கள் பலர் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கிய ‘வாரிசு’ தயாரிப்பாளர் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு..!

ராங்கி படம் தமிழ் சினிமாவில் புது கதைக்களத்துடன் வந்திருப்பதாகவும், திரிஷாவின் கதாபாத்திரம் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் பதிவிட்டுள்ள நெட்டிசன், திரிஷாவின் நடிப்பு அருமையாக இருந்ததாகவும், படத்தின் பிஜிஎம் மற்றும் டயலாக் வேறலெவலில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மொத்ததில் இது சூப்பரான திரில்லர் படம் என அவர் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், ராங்கி படம் திரிஷாவை புதிய பரிணாமத்தில் காட்டி உள்ளதாகவும், சிறந்த விஷுவல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இப்படம் இந்த புத்தாண்டுக்கு குடும்பத்தோடு சென்று பார்த்து கொண்டாடும் வகையில் உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ராங்கி சூப்பர் படம் என்றும், குறிப்பாக திரிஷா மற்றும் அலீம் ஆகிய கதாபாத்திரங்களுக்காகவே படத்தை பார்க்கலாம் என்றும் பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், அதில் திரிஷாவை தென்னகத்து இளவரசி என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு டுவிட்டில், “ராங்கி நல்ல படம். திரிஷாவின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் அருமையாக இருக்கிறது. மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். மொத்தத்தில் பார்க்கக்கூடிய படமாக ராங்கி உள்ளது” என பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... டேஞ்சர் ஜோனில் 3 பேர்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?