ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள பஹீரா என்கிற சைக்கோ திரில்லர் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜிவி பிரகாஷின் திரிஷா இல்லேனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் போன்ற திரைப்படங்களை இயக்கிவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் பஹீரா. சைக்கோ திரில்லர் படமான இதில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சாக்‌ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஜனனி, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி என மொத்தம் 7 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடைகளை தாண்டி 2023-ம் ஆண்டு தான் ரிலீசாகி உள்ளது. இதுதான் தான் எடுத்துள்ள கடைசி ஏ சான்றிதழ் திரைப்படம் என அப்படத்தின் இயக்குனரே அறிவித்திருந்தார். இந்நிலையில், பஹீரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. அந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... பீப் சாங் சர்ச்சைக்கு பின்... மீண்டும் அனிருத் உடன் கூட்டணி அமைத்த சிம்பு - அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

படம் பார்த்த் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “பஹீரா படம் டீசண்டாக இருக்கிறது. பிரபுதேவாவின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. இதர நடிகர் நடிகைகள் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையும், திரைக்கதையும் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. இளைஞர்களை இப்படம் கவரும்” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு டுவிட்டில், “முதல் பாதி ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. 3 பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடையாக அமைந்துள்ளன. பிஜிஎம் சூப்பர். பிரபுதேவா தரமாக நடித்துள்ளார். நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் ஆவரோஜான சைக்கோ திரில்லர் படமாகவே பஹீரா அமைந்தது” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “பசங்களுக்கான பக்கா எண்டர்டெயின்மண்ட் படம் பஹீரா. ஆதிக் ரவிச்சந்திரன் மாஸ் பண்ணிட்டிங்க. பிரபுதேவா நடிப்பு செம்ம” என பாசிடிவ் ஆக பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

படம் பார்த்த நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “கண்டெண்ட்ல மேட்டர் இல்ல. மேட்டர் தான் கண்டெண்டே. ஜாலியான படம். இளைஞர்களின் வைப்பை புரிந்து இந்த படத்தை எடுத்துள்ளார் ஆதிக். மன்மதன் போன்று ஒரு மேஜிக்கை உண்டாக்கும் தகுதி இந்த படத்துக்கும் உள்ளது. நடனத்தை விட நடிப்பில் மிரட்டி இருக்கிறார் பிரபுதேவா” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது இப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது தெரியவருகிறது. இயக்குனர் ஆதிக்கும் யூத்தை டார்கெட் பண்ணி தான் இப்படத்தை எடுத்துள்ளதாக கூறினார். பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... காட்டுக்குள் படப்பிடிப்பு... கண்ட இடத்தில் கைவைத்த நடிகருக்கு கன்னத்தில் பொளேர் என அறைவிட்ட பாகுபலி நடிகை