நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெபல் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக கலக்கி வந்த ஜிவி பிரகாஷ் குமார், தற்போது பிசியான ஹீரோவாகவும் வலம் வருகிறார். அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெபல். இப்படத்தை புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார்.

ரெபல் திரைப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று சோலோவாக தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... லவ் யூ அம்மு... மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய ரவீந்தர் - வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்

40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை கதையை கண்முன் கொண்டுவந்துள்ள படம் தான் ரெபல். ஜிவி பிரகாஷ் குமார் ஒரு நடிகராக இப்படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார். இண்டர்வெல் சீன் வேறலெவல். காட்சியமைப்பு, பின்னணி இசை, வில்லன் மற்றும் ஹீரோயின் மமிதா என அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ரெபல் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள ஒரு அருமையான படம். இப்படம் மூலம் அறிமுகமாகி உள்ள நிகேஷுக்கு வாழ்த்துக்கள். ஜிவி பிரகாஷ் குமார் அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அற்புதமாக உள்ளது. சிறந்த படம் என பாராட்டி இருக்கிறார்.

Scroll to load tweet…

ரெபல் ஒரு புரட்சிகரமான படம். தமிழ்மக்களுக்கான குரலாக இது உள்ளது. ஜிவி பிரகாஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோயின் மமிதா கியூட்டாக இருக்கிறார். வில்லன் கதாபாத்திரம் பவர்புல்லாக உள்ளது. எமோஷனல் கனெக்ட்டும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. பின்னணி இசையும் அருமை என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... அஜித் தெலுங்கு தயாரிப்பாளரை தேடி ஓடியது இதுக்காக தானா? குட் பேட் அக்லி படத்துக்காக AK வாங்கும் சம்பளம் இவ்வளவா