கம்பேக் கொடுத்தாரா கார்த்திக் சுப்புராஜ்... தீபாவளி ரேஸில் ஜெயித்ததா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்? விமர்சனம் இதோ
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, தேசிய விருதையும் வென்று அசத்தியது. இந்த நிலையில், தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இப்படத்திக் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்துக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையமைத்து உள்ளார். இப்படம் தீபாவளி விருந்தாக இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் படத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி கார்த்திக் சுப்புராஜ். உங்களின் கெரியரில் சிறந்த படம் இது. சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. ஒரு படம் பார்த்து நீண்ட நாட்களுக்கு பின் அழுதிருக்கிறேன் என பிரபல விமர்சகர் பிரசாந்த் கூறி உள்ளார்.
ஜிகர்தண்டா முதல் பாகத்தை விட இந்த படம் சிறப்பாக உள்ளது. இது ஒரு மாஸ்டர் பீஸ், இந்த படம் பல வருடங்களுக்கு கொண்டாடப்படும். உங்களின் மேஜிக்கிற்கு நன்றி கார்த்திக் சுப்புராஜ். சந்தோஷ் நாராயணனின் இசை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. இதுதான் தீபாவளி வின்னர் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இரண்டாம் பாதியும், கிளைமாக்ஸும் புல்லரிக்க வைக்கிறது. அதுவும் கடைசி 30 நிமிட எமோஷனல் காட்சிகள் வேறலெவல். என்ன ஒரு அருமையான சமூக கருத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ராகவா லாரன்சுக்கு இது சிறந்த படமாக அமைந்துள்ளது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் வேற லெவல் என பாராட்டி உள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கார்த்திக் சுப்புராஜ் படம். இதன் கடைசி 30 நிமிடங்கள் சினிமாவின் பலத்தை காட்டுகிறது. ராகவா லாரன்ஸை புதிய பரிணாமத்தில் பார்க்க முடிகிறது. எஸ்.ஜே.சூர்யா இம்பிரஸ் பண்ணி இருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் இசை தெறிக்கிறது. 3 மணிநேர படம் என்பதால் சில காட்சிகள் டல் அடிக்கின்றன. ஆனால் கிளைமாக்ஸ் படத்தை தூக்கி நிறுத்தி உள்ளது என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Japan Review: ஜப்பானாக கார்த்தி ஜொலித்தாரா? அல்ல சோதித்தாரா.. திரைப்பட விமர்சனம் இதோ..!