கார்த்தி நடித்த கைதி படம் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதேபோல் சர்தார் படமும் அவருக்கு கைகொடுத்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தி உளவாளியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சர்தார் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரைகளிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இப்படம் ரிலீசாகி உள்ளது. இன்று காலை 8 மணிக்கு சர்தார் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... தீபாவளி ரேஸில் தட்டித்தூக்கினாரா சிவகார்த்திகேயன்?... ‘பிரின்ஸ்’ படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

சர்தார் படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள டுவிட்டில், சர்தார் படம் சூப்பராக இருப்பதாகவும், கார்த்தி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தின் கதாபாத்திர தேர்வு சூப்பர் என்றும், ஜிவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்து உள்ளதாகவும், குறிப்பாக இண்டர்வல் காட்சி வேறலெவலில் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொருவர் போட்டுள்ள டுவிட்டில், இரும்புத்திரை படத்தைப் போல் திரைக்கதை அமைத்து இதிலும் ஆழமான கருத்தை சொல்லியுள்ள இயக்குனர் பி.எஸ்.மித்ரனின் முயற்சி அபாரம். கார்த்திக்கு இது அடுத்த பிளாக்பஸ்டர் படமாக அமையும். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை சூப்பர். மொத்தத்தில் இது சர்தார் தீபாவளி என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ள விமர்சனத்தில், படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் பி.எஸ்.மித்ரன் நிறைய வாட்ஸ் அப் பார்வர்டு மெசேஜ் படிப்பாரு போல, அதிலிருந்து நிறைய வருது. முனீஸ்காந்தின் ஒன் லைன் காமெடிகள் சூப்பராக இருப்பதாகவும், இண்டர்வல் சீன் தெறிக்கவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொருவர் போட்டுள்ள பதிவில், சர்தார் எண்ட்ரி வெறித்தனமாக உள்ளது. கார்த்தி - ஜிவி பிரகாஷ் - பி.எஸ்.மித்ரன் காம்போ தெறிக்கவிட்டுள்ளனர். தியேட்டரில் விசில் பறக்குது. என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

சர்தார் முதல் பாதி வேறலெவலில் உள்ளது. ஒவ்வொரு பிரேமிலும் பி.எஸ்.மித்ரனின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இது சர்தார் தீபாவளி போல தெரிகிறது. 

Scroll to load tweet…

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது சர்தார் படத்துக்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஏற்கனவே கார்த்தி நடித்த விருமன், பொன்னியின் செல்வன் ஹிட் ஆனதால், தற்போது சர்தார் படம் அவருக்கு ஹாட்ரிக் ஹிட்டாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... முதல் முறையாக தீபாவளி ரிலீஸ்... மனைவியோடு தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்