அனைத்து பள்ளிகளிலும் யோகாவை தனி பாடமாக கொண்டு வரவேண்டும் - ஆளுநர் தமிழிசை விருப்பம்
புதுவையில் அனைத்து பள்ளிகளிலும் யோகாவை தனி பாடமாகக் கொண்டுவர வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி அரசின் சுற்றுலா, கல்வி, இந்திய முறை மருத்துவத் துறைகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் சார்பில் 9-வது சர்வதேச யோகா தினவிழா இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் ராஜுவ் வர்மா, பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, அரசு செயலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.
முன்னதாக விழவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், 5 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு யோகா கற்றுக்கொடுப்பது நல்லது. வாழ்வியலை மேம்படுத்த யோகா அவசியம். ஆகவே அனைத்து பள்ளிகளிலும் யோகாவை தனி பாடமாக கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வியமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்; போஸ்டர் ஒட்டி திமுக நிர்வாகி மிரட்டல்
இதனைத் தொடர்ந்து புதுவையில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பள்ளி மாணவர்களை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், எனது குறிக்கோள் கல்வியிலும், சுகாத்தாரத்திலும் புதுச்சேரி முதன்மையாக வர வேண்டும் என்பது தான். அனுமதி இல்லாத வாகனங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
உண்மையிலேயே அரசாங்க மருத்துவர்களை பாராட்டுகின்றேன். ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு குழந்தைகள் காப்பாற்றபட்டுள்ளனர். அரசாங்க மருத்துவமனைக்கு மக்கள் நம்பிக்கையோடு வர வேண்டும். எனது குறிக்கோள் கல்வியிலும், சுகாத்தாரத்திலும் புதுச்சேரி முதன்மையாக வர வேண்டும் என்பது தான். ஒரு ஆட்டோவிற்கு 8 பேர் அதிகம் தான். இவ்வாறு அனுமதிக்க கூடாது. போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற விதிமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆட்சியரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைய சொன்ன மின்வாரிய அதிகாரி இடை நீக்கம்
புதுவையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைக்க முடியுமா எனவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குழந்தைகளை பார்வையிட்டது எனக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.