செய்தியாளர்களை எச்சரித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன்!

புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்களுடன் வாக்குவாதம் செய்து, தான் தமிழ்நாடு ஸ்டைலில் பேசினால் நல்லா இருக்காது என்றும் எச்சரித்தார். புதுச்சேரிக்கு ரூ.3342 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்த எல். முருகன், நிதி நெருக்கடி இல்லை என்றும் கூறினார்.

Union Minister of State L. Murugan warns journalists sgb

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்களுடன் வாக்குவாதம் செய்து, தான் தமிழ்நாடு ஸ்டைலில் பேசினால் நல்லா இருக்காது என்றும் எச்சரித்தார்.

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய எல். முருகன், 2025ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது என்றார். அப்போது செய்தியாளர்கள், புதுச்சேரிக்கு இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எல். முருகன் புதுச்சேரிக்கு ரூ.3342 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்தார். புதுச்சேரிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்காதது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். புதுச்சேரியில் நிதி நெருக்கடி உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி கூறியதையும் சுட்டிக்காட்டினர்.

அதைக் கேட்ட அமைச்சர் முருகன், "புதுச்சேரியில் நிதி நெருக்கடி ஒருபோதும் இல்லை. ஆளுநரும் முதல்வரும் கேட்ட நிதிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது" என்றார்.

செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பிய நிலையில், "நான் தமிழ்நாடு ஸ்டைலில் பேசினால் அது நல்லா இருக்காது. இது விவாதம் செய்யும் இடம் கிடையாது. வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கோபத்துடன் பேசினார்.

தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களும் ஒன்று சேர்ந்து எல். முருகனிடம் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட செய்தியாளர் சந்திப்பு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios