சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து வசூல் வேட்டை நடத்தும் காவல்துறை - வியாபாரிகள் கண்டனம்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரியில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து போக்குவரத்து காவல் துறையினர் நடத்தும் வசூல் வேட்டைக்கு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக புதுச்சேரி உள்ளது. மது விருந்து, ஆடல், பாடல் என கலை நிகழ்ச்சிகள் களைகட்டும். அந்த வகையில் தற்போதே புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடற்கரையை ஒட்டிய ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பத் தொடங்கியுள்ளன. வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பேருந்து, ரயில், விமானம் மூலம் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கு கிடைக்கும் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு விருப்பமான இடங்களை சுற்றி பார்க்கச் செல்வது வழக்கம். பொருளாதார ரீதியாகவும் இதுவே அவர்களுக்கு வசதியாக உள்ளது.
அரசு அதிகாரிகளால் மனஉளைச்சல் ஏற்படுகிறது - முதல்வர் அதிருப்தி
இதுபோன்று இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போக்குவரத்து காவல் துறையினர் வேகமாக செல்வது, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட காரணங்களை கூறி அபராதம் விதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. பிரதான சாலைகள் மட்டுமல்லாது குறுகிய தெருக்களில் நின்று கூட காவல் துறையினர் இதுபோன்ற வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
பிரதமரை அவமதித்த பாக். அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? திமுகவுக்கு வானதி கேள்வி
காவல் துறையினரின் இதுபோன்ற நடவடிக்கையால் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு செல்ல வேண்டுமா என்ற மனநிலைக்கு தள்ளப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறையும் பட்சத்தில் வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.