உயிரை பணயம் வைத்து சேவையாற்றிய எங்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு பணி வழங்குவதா? செவிலியர்கள் போராட்டம்

கொரோனா காலத்தில் பல்வேறு அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றிய எங்களுக்கு பதிலாக புதியவர்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என்று கூறி புதுவையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

temporary nurses protest to need a government job in puducherry vel

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலங்களில் பணியாற்றுவதற்காக சுகாதாரத் துறையில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து 263 செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்கள் தற்காலிகமாக அமர்த்தபட்டாலும், பணி நிரந்தரம் செய்யப்படுவீர்கள் என்ற வாக்குறுதியுடன் இவர்களுக்கு பணி வழங்கப்பட்டது.

தொடர்ந்து கொரோனா காலங்களில் இவர்கள் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்வது, கொரோனா தடுப்பூசி செலுத்துவது, மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் தற்பொழுது சுகாதாரத் துறை சார்பில் செவிலியர்களுக்கு ஆட்கள் நியமிப்பதற்காக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

காவிரி ஆற்றங்கரையில் சித்தராமையாவுக்கு இறுதிச்சடங்கு; திருச்சியில் ஆற்றில் இறங்கிய விவசாயிகளால் பரபரப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் கொரோனா காலங்களில் பல்வேறு  அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவை செய்த தங்களுக்கு பணி வழங்காமல் புதியதாக ஆட்கள் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு படிக்கட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நான் கடவுள் சினிமா பாணியில் கிரிவலப் பாதையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட சிறுவர்கள்; அதிகாரிகள் அதிரடி

இது குறித்து செவிலியர்கள் கூறும் பொழுது, கொரோனா காலங்களில் வீடு வீடாக சென்று கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தோம், தடுப்பூசி செலுத்தினோம், அப்போது எங்களை வீட்டு பக்கமே வரக்கூடாது என்று பலபேர் அவமானப்படுத்தினார்கள், அசிங்கப்படுத்தினார்கள். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு மக்களுக்கு சேவை செய்த தங்களுக்கு பணி வழங்காமல் புதியதாக ஆட்கள் எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இது ஏற்கக் கூடியதல்ல ஏற்கனவே எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி படி 263 பேருக்கும் பணி வழங்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios