Asianet News TamilAsianet News Tamil

பிரான்சில் வேலை: வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த பெண்!

பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கூறி புதுச்சேரியை சேர்ந்த வாலிபரிடம் பெண் ஒருவர் மோசடி செய்ததாக அவர் புகார் அளித்துள்ளார்

puducherry youth complaint against woman defrauded to get him a job in France
Author
First Published Aug 11, 2023, 4:57 PM IST

புதுச்சேரி காரைக்கால் மேல ஓடுதுறை, அருள்மொழி நகரை சேர்ந்தவர் ராஜகுமாரன். இவரது மனைவி 44 வயதான அமுதா இவர்களுக்கு திருமணமாகி  4 குழந்தைகள் உள்ளனர். பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ராஜகுமாரன் குடும்பத்துடன் பிரான்சில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த நாவற்குளம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் அமுதா மற்றும் அவரது கணவர் ராஜகுமாரன் மீது கடந்த மார்ச் மாதம் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். 

அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு 1 மாத்திற்கு மலிவு விலையில் காய்கறி வழங்கும் பாஜக பிரமுகர்

அந்த புகாரில், அமுதா தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும், அதனை நம்பி அமுதாவின் வங்கி கணக்கில் ரூ.16 லட்சம் செலுத்தியதாகவும், ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. எனவே, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, அதனை தராமல் அமுதா தன்னை மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சண்முகம் அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் இதனை அறிந்து கொண்ட அமுதா திடீரென்று தலைமறைவாகி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கினார். இதனை அறிந்த லாஸ் பேட்டை போலீசார் அமுதாவின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் சண்முகம் கூறுகையில், “பிரான்சில் வேலை வாங்கி தருவதாக அமுதா என்னிடம் 16 லட்சம் ரூபாய் வங்கியின் மூலம் பணம் பெற்றார். மீதம் 3 லட்ச ரூபாய் கைகளில் ரொக்கமாக கொடுத்தேன். எனது பணத்தை மீட்டு தர வேண்டும். பணத்தை கேட்டால் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களை கொண்டு அமுதா என்னை மிரட்டுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அமுதாவின் உறவினர்களுக்கு நான் ஏதும் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. என்னை பிரான்சுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லவே அவர் என்னிடம் பணம் வாங்கினார். தற்போது அதன் பேரில்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்து சிலரின் தூண்டுதலின் பேரில் என்னை தினமும் மிரட்டி வருகிறார்.” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios