பிரபல ரவுடி மகன் உள்பட 3 பேர் படுகொலை! சிக்கிய கர்ப்பிணி பெண்! வெளியான அதிர்ச்சி தகவல்!
புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி ரெயின்போ நகர் ஏழாவது குறுக்கு தெருவில் கடந்த 14ம் தேதி அன்று காலை கடந்த 14ம் தேதி அன்று காலை புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், மூன்று வாலிபர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர்கள் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரிஷி, திடீர் நகரைச் சேர்ந்த தேவா மற்றும் ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி ஆகியோர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் ரவுடி சத்யாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் பதுங்கி இருந்த ரவுடி சத்யாவை போலீசார் கைது செய்தனர். ரவுடி சத்யாவைத் தீர்த்துக் கட்ட மூவரும் நோட்டமிட்டதால் அவர்களை ஆட்களை வைத்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. மூவரையும் வீட்டில் வைத்து அடித்து சித்ரவதை செய்து, வீடியோ எடுத்து வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சத்யாவின் கூட்டாளிகளான சிறுவன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலர் இருப்பதாக சந்தேகித்த போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ரவுடி சத்யாவின் ரகசிய காதலி சுமித்ரா (24) மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஆபிரகாம், ஹரிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் ரவுடி சத்யா சுமித்ரா உடன் கடற்கரை சாலையில் காதலர் தினத்தை கொண்டாட சுற்றி வந்ததும், அப்போது சத்யாவை நோட்டமிட்டு கொலை செய்ய திட்டமிட்ட வாலிபர்களை தனது கூட்டாளிகளை வரவழைத்து கத்தி முனையில் கடத்தி சென்ற போது உடன் இருந்தது தெரியவந்தது. கொலைக்கு பின்னர் ரவுடி சத்யாவிற்க்கு ரூ. 5000 ஆபணம் சுமித்ரா ஜீபே மூலமாக அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடியின் காதலி 2 மாத கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.