அல்ஜீரியா இஸ்லாமிய பெண்ணை வள்ளலார் முறைப்படி கரம் பிடித்த புதுச்சேரி கிறிஸ்தவ இளைஞர்
அல்ஜீரியா நாட்டு இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்த புதுவையைச் சேர்ந்த கிறிஸ்தவ இளைஞர் வள்ளலார் சன்மார்க்க முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
புதுச்சேரியில் சுற்றுலாவியல் அறிஞரான கண்ணன் மற்றும் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் பேராசிரியை நோயலின் மகன் அபிலாஷ். இவர் நெதர்லாந்து நாட்டில் பணியில் இருக்கிறார். அதே இடத்தில் பணிபுரிந்த அல்ஜீரியன் நாட்டைச் சேர்ந்த பாத்திமா ஹப்பி என்ற இசுலாமிய பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.
இதனையடுத்து இரு விட்டார் சம்மதத்துடன் சமயம், சாதி, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து இறைவன் ஒருவனே என்ற அடிப்படையில் அன்பினை மட்டுமே மையப்படுத்தி வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்துக் கொண்டனர். தட்டாஞ்சாவடியில் உள்ள வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் சன்மார்க்கிகள் கலந்து கொண்டு வள்ளலார் எழுதிய திருவருட்பாவின் ஆறாம் திருமுறை பாடலை சுமார் இரண்டரை மணி நேரம் அகவல் பாராயணம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
18 வயது பூர்த்தி அடைந்த ஒரே வாரத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி
இதில் இந்து முறைப்படியும் இல்லாமல் முஸ்லிம், கிறிஸ்தவ முறைப்படியும் இல்லாமல் சன்மார்க்க முறைப்படி மாங்கல்யத்துக்கு பதிலாக தங்கச் செயினை கழுத்தில் அணிந்து மாலை மாத்தி திருமணம் செய்து கொண்டனர். இதில் கூடியிருந்த ஏராளமானோர் அர்ச்சனைகள் தூவி மணமக்களை வாழ்த்தினார்கள். அன்பின் வழியில் நின்று அறப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெரியோர்கள் மற்றும் சன்மார்க்க சங்கத்தினர் முன்னிலையில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் உறுதிமொழி ஏற்று திருமணம் செய்து கொண்டனர்.
4 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெற்ற மாம்பழத் தேரோட்டம்
மேலும் தட்டாஞ்சாவடி வள்ளலார் அவையில் உலகப் பொதுமறை திருக்குறளின் மீதும் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் திருமுறையின் மீதும் மணமக்கள் உறுதியேற்று கொண்டனர். திருமணம் குறித்து மணமகன் அபிலாஷ் கூறும்போது. சாதி, இனம், மொழி, மதம் கடந்து நடைபெறும் இம்மாதிரியான திருமணங்கள் மக்களிடம் ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகிறது. நான் வெளிநாடு சென்றிருந்த பொழுது நட்பாக தான் பழகி இருந்தோம். ஆனால் அது எப்படி காதலாக மாறியது என்று தெரியவில்லை. தற்போது இருவிட்டார் சம்மதத்துடன் நாங்கள் திருமணத்தை செய்து கொண்டோம் என்று தெரிவித்தார்.