திறந்த வெளி மதுபான பாராக மாறிவரும் புதுச்சேரி கனரக வாகன முனையம்! - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
புதுச்சேரி மேட்டுப்பாளையப் பகுதியில், கனரக வாகன முனையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் குவியல் குவியலாக கிடக்கும் மதுபான பாட்டில்களால், அவ்விடம் திறந்த வெளி மதுபான பாராக மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையப் பகுதியில், கனரக வாகன முனையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் குவியல் குவியலாக கிடக்கும் மதுபான பாட்டில்களால், அவ்விடம் திறந்த வெளி மதுபான பாராக மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு பூத்துறை பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வரும் பகுதியாகும். மேலும் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் கனரக வாகன முனையம் மற்றும் புதுச்சேரிஅரசு போக்குவரத்து துறை அலுவலகமும் இயங்கி வருகிறது.
இங்கு கணரக வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தவும் போக்குவரத்து துறை பயன்பாட்டிற்கும் மிகப்பெரிய திடல் உள்ளது. அதேபோன்று மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றி மதுபான கடைகள் அதிக அளவில் உள்ள காரணத்தால் இத்திடலில் குடிமகன்கள் இரவு மற்றும் பகல் நேரத்தில் அமர்ந்து கும்பல் கும்பலாக நள்ளிரவு வரை மதுஅருந்தி வருகின்றனர்.
மேலும் குடிப்பவர்கள் மது பாட்டில்கள், காலி வாட்டர் பாட்டில் பிளாஸ்டிக் டம்பளர் மற்றும் பீர் பாட்டில்கள் மேலும் உணவு தின்பண்டங்கள் வாங்கி வரும் பிளாஸ்டிக் பைகள், கூடைகள்,கப்புகள் என அனைத்தையும் அங்கேயே விட்டு செல்வதால் தொழிற்பேட்டையில் கனரக வாகனங்கள் நிற்கும் முனையம் மற்றும் போக்குவரத்து துறை பயன்பாட்டிற்குட்பட்ட திடல் முழுவதும் மதுபாட்டில்கள் ஆகவும் பிளாஸ்டிக் பொருட்களாகவே காட்சி அளிக்கிறது.
ஒரு கையில் ஸ்டியரிங், செல்போன், ஹெட்போன், கியர், நடுவுல கொஞ்சம் ஸ்நேக்ஸ்; ஓட்டுநருக்கு சிறப்பு கவனிப்பு
மேலும் இங்கு அமர்ந்து மது குடிப்பவர்கள் கனராக முனையத்திற்கு வரும் லாரி ஓட்டுநர்களை மிரட்டுவது இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பொது மக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அந்த பகுதியில் செல்லவும் வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தவும் அச்சப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் போலீசார் ரோந்து வராததால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.