புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாட்டம்

பிரெஞ்சு புதுச்சேரி சட்டபூர்வ பரிமாற்ற தினத்தை முன்னிட்டு கீழூர் நினைவு மண்டபத்தில் அமைச்சர் தேனி ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

Puducherry Govt Statutory Transfer Day Celebration at august 16

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரி ஆகஸ்ட் 16ம் தேதி சட்டபூர்வமாக பரிமாற்றம் செய்யப்பட்டது. இதனை ஆண்டுதோறும் புதுவை அரசின் சார்பில் புதுச்சேரி அடுத்த உள்ள கீழூர் நினைவு மண்டபத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.

அதன்படி புதுச்சேரி அரசு, செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கீழூர் நினைவு மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வேளாண் அமைச்சர் ஜெயக்குமார்  தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

ஆடி அமாவாசை; லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால்  திணறிய கன்னியாகுமரி

இதனைத்தொடர்ந்து  சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் முதல்வரின் பாராளுமன்றச் செயலர் ஜான்குமார், தலைமைச் செயலர்  ராஜீவ் வர்மா, காவல் துறை இயக்குநர் ஜெனரல் ஶ்ரீநிவாஸ் ஆகியோர் கீழூர் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தியாகிகளுக்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios