Asianet News TamilAsianet News Tamil

புதுவையில் “புத்தகை பை இல்லா நாள்” பள்ளி மாணவர்களை பார்த்ததும் குழந்தையாக மாறி நடனமாடிய ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் இன்று புத்தக பை இல்லா நாள் கடைபிடிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக ஆய்வுக்குச் சென்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாணவர்களுடன் கைகோர்த்து நடனமாடினார்.

puducherry governor tamilisai soundararajan dance with school student video goes viral
Author
First Published Jul 31, 2023, 5:24 PM IST | Last Updated Jul 31, 2023, 5:24 PM IST

புதுச்சேரியில் குருசுகுப்பம் அரசு பள்ளி மற்றும் சாரம் அரசு தொடக்கப் பள்ளிக்கு துணைநிலை ஆளுநர்  தமிழிசை இன்று ஆய்வுக்காகச் சென்றார். புத்தகப் பை இல்லாத நாள் இன்று கடைபிடிப்பதை ஒட்டி மாணவர்களை சந்தித்து அவர் புத்தகம் இன்றி விளையாட்டு, கலை, இலக்கியம் போன்ற விஷயங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் மாணவர்களை சந்தித்தார்.

அப்போது பள்ளி மாணவிகள் துணைநிலை ஆளுநர் முன்பு நடனமாடி மகிழ்வுடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தமிழிசை, ஒருக்கட்டத்தில் அவர்களுடன் கைகோர்த்து நடனம் ஆடினார். அப்போது மாணவர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள். சிறிது நேரம் மாணவர்கள் கை கோர்த்தும் கைகளை உயர்த்தியும் நடனமாடி அவர்களை மகிழ்வித்தார்.

மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு; அதிக குறியீடுகள் பெற்று தமிழகம் தொடர்ந்து முதல் இடம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் இன்று புதுமையாக புத்தகம் இன்றி  அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் நானும் மகிழ்ச்சி ஆகிவிட்டேன். அதனால் அவர்களுடன் நடனம் ஆடினேன் எனக் கூறினார். மாணவிகள் ஆர்வத்துடன் கோலம் போட்டனர். காகிதப்பை செய்தனர். ஒரே நாளில் இவ்வளவு மாணவர்கள் கலை ஆர்வத்துடன் இருந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. 

இடைவெளி விட்டு ஒரு பணியை செய்தால் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் இந்த முயற்சியை எடுத்துள்ளோம். அனைத்து மாணவர்களும் மகிழ்வுடன் இருக்கிறார்கள்.

170 ஆடுகள் வெட்டப்பட்டு ஆண்களுக்கு மட்டும் கம கம கறி விருந்து; நாமக்கல்லில் விநோத திருவிழா

ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தில் மார்க்கெட் கட்டிடம் விரைவாக கட்டி வசதி மிக்க இடமாக  மாறும். இப்படியே இருந்தால் அது வசதி இன்றி மிகப் பழமையாக போய்விடும். இதற்கு நாம் ஒத்துழைப்பு தர வேண்டும். எட்டு மாதத்துக்குள் கட்டி முடிக்க முடியாது என்று அவர்களே கூறுகிறார்கள். ஆனால் இந்த குழந்தை எட்டு மாதத்தில் நிச்சயமாக பிறக்கும்.

வியாபாரிகள் அச்சப்பட தேவையில்லை. மார்க்கெட் விரிவாக்கம் செய்யாமல் நிறுத்தப்பட்டால் அதற்கென்று ஒதுக்கப்பட்ட நிதி வீணாகிவிடும். இன்று சிரமத்தை பொறுத்துக் கொள்வதால் நாளை வசதி படைத்த இடம் உங்களுக்கு கிடைக்கும் என தமிழிசை தெரிவித்தார். வியாபாரிகள்  நேரடியாக என்னை வந்து சந்தித்தால் விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios