புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி

சட்டபேரவை இன்று ஒரு நாள் மட்டுமே கூடியது-இடைக்கால பட்ஜெட் தாக்கல். மக்களவை தேர்தல் காரணமாக 5 மாத அரசு செலவீனத்திற்கு 4634 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

Puducherry Chief Minister Rangasamy today presented the interim financial report for the state vel

புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்காக புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.50 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபையை தொடங்கி வைத்தார்.

முதலில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் ப.கண்ணன், வேளாண் விஞ்ஞானி எம்எஸ்.சுவாமிநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா, பங்காரு அடிகளார், பாத்திமா பீவி ஆகியோர்  மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பாஜகவின் சிறப்பான ஆட்சியே நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம் - மத்திய அமைச்சர் பெருமிதம்

இதனையடுத்து சட்ட முன்வரைவுகள் எடுத்து கொள்ளப்பட்ட போது காங்-திமுக உறுப்பினர்கள் எழுந்தனர். பாராளுமன்ற தேர்தல் இருந்தாலும் பல மாநிலங்களில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் புதுச்சேரி அரசு தவறி இடைக்கால பட்ஜெட் தாக்கலை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என கூறி ஒட்டுமொத்த எதிர்கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து 4634 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை  5 மாத அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். நடப்பாண்டில் அரசின் கூடுதல் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல், பொதுத்துறை நிறுவனங்களின் ஏடுகள்  வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன.

நாகை மீனவர்களின் வலைகளை கிழித்து புதுவை மீனவர்கள் அட்டூழியம்; மீனவர்கள் குமுறல்

இதனை தொடர்ந்து காலை 10.55 மணிக்கு அலுவல்களை முடித்து சபை நடவடிக்கை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்தி வைத்தார். இன்று  ஒரு நாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெற்றது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் விதிகளின்படி கடந்த செப்டம்பர் 9ம் தேதி சட்டமன்றம் கூடியது. அன்று ஒரு நாள் மட்டுமே சட்டமன்றம் நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதினால் மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் முடிவு செய்ய முடியாது என்பதால் அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடதக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios