Asianet News TamilAsianet News Tamil

புதுவையில் இன்று முதல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் இன்று முதல் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளர்.

Puducherry Centac invites online applications for medicine dentistry veterinary medicine
Author
First Published Jul 12, 2023, 1:32 PM IST

புதுச்சேரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தினயார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேர இன்று முதல் வருகின்ற 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண், கல்விச்சான்றிதழ், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர். பதிவு செய்தல் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இயைதளத்தில் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios