Watch : தண்ணீல் கலந்து பெட்ரோல் விற்பனையா? பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்!
பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாகன ஓட்டி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது
புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர் உழந்தை கீரைப்பாளையம் சாலையில் சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் தரம் மற்ற பெட்ரோல் விற்கப்படுவதாகவும் கலப்படம் செய்து விற்கப்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்தன.
அப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. ஆனால் பெட்ரோல் பங்க் நிர்வாகமும் கலப்படம் செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்து பெட்ரோல் விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருசக்கர வாகன ஓட்டி வாகனத்தில் பெட்ரோல் போட்ட போது, முதலில் தண்ணீரும் அதன் பிறகு பெட்ரோலும் வந்ததாக குற்றம்சாட்டினார். பின்னர், பெட்ரோலை வாங்குவதற்காக பாட்டில் எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால், மெஷின் பழுது எனக் கூறி பங்கு ஊழியர்கள் பெட்ரோல் போட மறுத்ததால் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.