Asianet News TamilAsianet News Tamil

காதல் தோல்வியால் ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை.. பாசப்போராட்டம் நடத்திய நாய்..!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பெர்ரி ரோட்டில் வசித்தவர் மண்டங்கி காஞ்சனா (23).  இவர் அங்குள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. 

love failure...young girl commits suicide by jumping into the river
Author
First Published Jul 19, 2023, 2:12 PM IST

காதல் தோல்வியால் இளம்பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பெர்ரி ரோட்டில் வசித்தவர் மண்டங்கி காஞ்சனா (23).  இவர் அங்குள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் இருந்த தனது செல்லப் பிராணியான நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கிளம்பிய மண்டங்கி காஞ்சனா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால், அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர். அப்போது,  காஞ்சனாவுடன் வந்த நாய் அங்குள்ள கோதாவரி ஆற்று பாலத்தின் மீது படுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்களது நாயை அடையாளம் கண்ட மண்டங்கி காஞ்சனாவின் குடும்பத்தினர் நாய் அருகில் சென்று பார்த்தபோது காஞ்சனா காலில் அணிந்து வந்திருந்த செருப்பு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

இதனிடையே காஞ்சனாவின் தாய், உறவினர்களை பார்த்த நாய், உடனே பாலத்தின் மீது நின்றவாறு கீழே ஓடும் ஆற்று நீரை பார்த்தபடி சுற்றிசுற்றி வந்தது. அதன்பிறகே மண்டங்கி காஞ்சனா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடினர். 

இதனிடையே காஞ்சாவின் உடல் கோதாவரி ஆற்றில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. நடைபயிற்சிக்கு வந்த இளம்பெண் காதல் தோல்வியால் கோதாவரி ஆற்றில் தற்கொலை செய்ய குதித்த நிலையில், அந்த இடத்தைவிட்டு செல்லாமல் அவரது செல்லப்பிராணியான நாய், அங்கேயே சுற்றிசுற்றி நின்றபடி பாசப் போராட்டம் நடத்தியது உறவினர்களிடம் மட்டுமின்றி அப்பகுதி மக்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios