புதுவையில் சற்று நேரத்தில் சரிந்து விழுந்த பிரமாண்ட நீர் தேக்க தொட்டி

புதுச்சேரியில் சிதிலமடைந்து காணப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக தொட்டி கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பிரமாண்ட நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

giant water tank demolished video viral in puducherry

புதுச்சேரி வீராம்பட்டினம் ஆர் கே நகரில் குடியிருக்கும் மக்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோக்கிக்கப்பட்டு வந்தது. இந்த  தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. மேலும் பழுதாகி இருந்த இந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு மீண்டும் புதிய குடிநீர் தொட்டி அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

அதனால் சிதலமடைந்த தொட்டியை இடிக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி இன்று அப்பகுதியில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே சேதமடைந்த அந்த தொட்டியில் மேல் பகுதிகள் இரும்பு கயிறு மூலம் கட்டி இழுத்தனர். ஜே.சி.பி  இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட இந்தத் தொட்டி சில நிமிடங்களில் மேலே இருந்து சரிந்து விழுந்தது.

பயங்கர சத்தத்துடன் நீர்த்தேக்க தொட்டி விழுந்த காட்சியை ஊழியர்கள் சிலர் படம் எடுத்தனர். இந்த பதப்பதைக்கும் வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் குடிநீர் தொட்டி அருகே இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்ற தெரியாத நிலையில் பதற்றமடைந்த ஊழியர்கள் குறைந்தவுடன் பார்த்தபோது அவர்கள் பத்திரமாக இருந்தது தெரிய வர அனைவருக்கும் நிம்மதி அடைந்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios