ஆரம்ப சுகாதார மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர்கள்

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார மையத்தில் துப்பரவு பணியாளர் ஒருவர் நோயாளிகளுக்கு கட்டு கட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

cleaning worker did treatment for patients in puducherry preliminary hospital

புதுச்சேரி அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிஷேகப்பாக்கம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இந்த மையத்தின் மூலம் அபிஷேகப்பாக்கம், டிஎன். பாளையம், தேடுவார்நத்தம் மற்றும் அருகே உள்ள தமிழக பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர், 

இந்த நிலையில் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் தடுப்பு ஊசி தட்டுப்பாடு, அவசரத்திற்கு ஆம்புலண்ஸ் ஓட்டுனர் இல்லை, சில முக்கிய மருந்து மாத்திரை மற்றும் தடுப்பூசிகளை பிற சுகாதார மையங்களில் இருந்து கொண்டு வர காலதாமதம் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் பல இன்னல்களை மேற்கொள்கின்றனர், மருத்துவர்கள் நேரத்தோடு பணிக்கு வராமல் நோயாளிகளை காக்க வைக்கின்றனர் என்று ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

மீன் பிடிப்பதற்காக வெடிகுண்டு வீசிய மீனவர்; நீருக்குள் நீதிய நபர் உடல் சிதறி பலி

தற்போது இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில்  விபத்தில் அடிபட்டு கட்டு்போட வரும் அவசர நோயாளிக்கு அங்கு பணிபுரியும் ஹவுஸ் கீப்பிங் பணியாளர் ஒருவர் கட்டுபோடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது, எனவே இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறைஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வரதட்சணை கொடுமை தாங்காமல் 3 மாத கர்ப்பிணி உடலில் தீ வைத்து தற்கொலை

மேலும் இந்த சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவர் மீதும் ஊழியர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை இடமாற்ற செய்துவிட்டு அரசு ஆரம்ப சுகாதார மைத்திற்க்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கையில் அடிபட்டு வந்தவருக்கு ஹவுஸ் கீப்பிங் பணியாளர் கட்டுப்போடும் வீடியோ தற்போது புதுச்சேரியில் தீயாய் பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios