புதுச்சேரியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாத அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.32.7 கோடி செலவு செய்துள்ளது. டிசம்பர் மாதத்துக்கான இலவச அரிசி 10 நாட்களில் வழங்கப்படும்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறந்தும் அரிசி வழங்கப்படாமல் இருப்பதால் அக்டோபர், நவம்பர் மாதம் வழங்கவேண்டிய அரிசிக்குப் பதிலாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.32.7 கோடியை செலவு செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால், டிசம்பர் மாத அரிசியை 10 நாட்களில் வழங்க இருப்பதாகவும் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

புதுவையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதம் தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசுக்கும் ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதல் போக்கினால், ரேஷன் பயனாளிகளுக்கு அரிசிக்குப் பதிலாக பணமாகத் தரப்பட்டது. இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டன.

10 கிலோ அரிசி பெறும் மஞ்சள் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.300, 20 கிலோ அரிசி பெறும் சிகப்பு கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.600 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மீண்டும் அரிசி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், முதல்வர் ரங்கசாமி, மீண்டும் ரேஷன் கடைகளைத் திறந்து அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். தீபாவளியை ஒட்டி, ரேஷன் கடைகளில் இலவச அரிச வழங்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பிறகு அரசு கொள்முதல், டெண்டர் தாமதம் போன்ற காரணங்களால் அரிசி வழங்கப்படவில்லை. இதனால், ரேஷன் கடைகளும் தீபாவளிக்குப் பிறகு மூடியே இருக்கின்றன. கடந்த 10ஆம் தேதி இலவச அரிசி வழங்கும் திட்டத்தை ஆளுநர் கைலாஷ்நாதனும் முதல்வர் ரங்கசாமியும் இணைந்து மீண்டும் தொடங்கி வைத்தனர்.

இலவச அரிசியை 10 கிலோ பைகளில் வழங்கு கான்பெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 3,54,255 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4,922 டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் டிசம்பர் மாத இலவச அரிசி பயனாளிகளுக்கு விநியோகம செய்யப்பட உள்ளது.

2024ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வழங்கியிருக்க வேண்டிய அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. ரூ.32.73 கோடி செலவில் சிவப்பு கார்டுக்கு ரூ.600, மஞ்சள் கார்டுக்கு ரூ.300 கொடுக்கப்பட்டிருக்கிறது என குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.