Watch|புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி! முதல்வர் மீதும் தெளித்த பெட்ரோல்! ஓடி வந்த அதிகாரிகள்

புதுச்சேரியில், நில அபகரிப்பு புகார் கூற வந்த ஒரு குடும்பத்தினர், கையில் பெட்ரோல் கேனுடன் சட்டசபை வளாகத்தில் காத்திருந்தனர். முதல்வர் வந்ததும், திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பெட்ரோல் சிதறி முதல்வர் மீதும் தெளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் தலைதெரிக்க ஓடி வந்து முதல்வரை அழைத்துச் சென்றனர்.
 

An attempt to set fire to the Puducherry Legislative Assembly complex! Petrol sprayed on the Chief Minister!

புதுச்சேரி கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வத்துரை இவரது மனைவி தவமணி இவர்களது பெயரில் கோர்காடு பகுதியில் 38 குழி விவசாய நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த இடத்தை புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஒரு சில கும்பல் திடீரென்று உள்ளே புகுந்து அத்துமீறி அபகரிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்தில் தவமணி புகார் அளித்தும் புகார் மனு மீது போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து அந்த கும்பல் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த குடும்பத்தினர், கடுமையான மன உளைச்சலிலுக்கும் ஆளாகி ஆறு கேன் பெட்ரோலுடன் சட்டசபை காவலர்களுக்கு தெரியாமல் உள்ளே நுழைந்து முதலமைச்சர் வரும் வரை சட்டசபை வளாகத்தில் காத்திருந்தனர்.



அப்போது சட்டசபைக்குள் காரில் வந்த முதலமைச்சர் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்க முயன்றார். அப்போது தவமணி குடும்பத்தினர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிலத்தை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள் என்று முதலமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதனர்.

இதனால் முதலமைச்சர் ரங்கசாமி கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும் பெட்ரோலை ஊற்றும்போது ஒரு சில துளிகள் முதலமைச்சரின் மீதும் பட்டதால் சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஜெயலலிதாவுக்கு ரோடு போட்டு அசத்தியவர் ஸ்டாலினுக்கு போடுவாரா? யார் இந்த முத்துசாமி?

இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தலைதெரிக்க ஓடிவந்த, தீ குளிக்க முயன்றவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அமைதி படுத்தினர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட ஆறு பேரையும் பெரிய கடை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

நில அபகரிப்பு புகாரில் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு பேரும் ஆறு கேன் பெட்ரோலுடன் சபை காவலர்களுக்கு தெரியாமல் சட்டசபை உள்ளே நுழைந்து, முதலமைச்சர் வரும் வரை காத்திருந்து அவர் வந்தவுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios